செங்கொடி

செங்கொடி (Senkodi, அகவை:21, இறப்பு: ஆகஸ்ட் 28, 2011) ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி ஆகத்து 28, 2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார்.[1] இவர் காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள். காஞ்சிபுரத்தில் இயங்கிய மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து தமிழுணர்வுப் போராட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார்.

செங்கொடி

நிகழ்வு நடந்த நாள் காலையில் காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். அன்று மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பலியானார்.[2]

ஆகத்து 31, 2011 அன்று செங்கொடியின் நினைவைப் போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. Leaders pay homage to Sengodi: Seek celemency to 3 Rajiv killers
  2. தமிழ் இன உணர்வு பற்று அதிகம் கொண்ட செங்கொடி
  3. உணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற தோழர்.செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு! - சென்றுவா தமிழினப் பெருமகளே....

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.