சேக்மெட்
சேக்மெட் பண்டைய எகிப்திய சமயத்தில் கூறப்படும் போர்க் கடவுளும், கோபத்தை ஆற்றும் பெண் கடவுளும் ஆவார்.[1][2]இவர் எகிப்திய பார்வோன்களின் பாதுகாவலராகவும், போரில் அவர்களை வழிநடத்திச் செல்பவராகவும் கருதப்படுகிறார். இவர் கதிரவக் கடவுள் இராவின் மகள் ஆவார். இவரது மூச்சுக்காற்றில் இருந்து பாலைவனம் உருவானதாக கூறப்படுகிறது. சேக்மெட் பெரும்பாலும் சிங்கத் தலையுடன் இரத்த நிற உடையுடன் காட்சியளிக்கிறார். இவர் வத்செட் கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
சேக்மெட் | |
---|---|
![]() கதிரவ தகடு அணிந்து சிங்கத் தலையுடன் காட்சியளிக்கும் செக்மெட் | |
துணை | தாவ் |
பெற்றோர்கள் | இரா |
சகோதரன்/சகோதரி | ஆத்தோர், பாசுடெட், செர்கெட், ஷூ மற்றும் டெஃப்னூட் |
குழந்தைகள் | நெஃப்ரெடம், மாகேசு |
சேக்மெட் கோபம் நிறைந்த உக்கிர கடவுள் ஆவார். சிங்கம் போன்ற வேட்டைக் குணம் கொண்ட சேக்மெட் பல மனிதர்களைக் கொன்று அவர்களின் குருதியைக் குடித்தார். அவரை தடுக்க எண்ணிய இரா, அவருக்கு குருதி என்று பொய் கூறி அதன் நிறத்தில் இருந்த மதுபானத்தை கொடுத்தார். அதை அருந்திய பிறகு சேக்மெட்டின் கோபம் தணிந்தது. அதனால் இன்றும் சேக்மெட்டின் வழிபாடு தலங்களில் அவருடைய கோபத்தை தணிப்பதற்காக அவருக்கு மதுபானம் படைக்கப்படுகிறது.
பெயர்க்காரணம்
பண்டைய எகிப்திய மொழியில் சேக்கெம் என்ற சொல்லுக்கு வலிமை என்று பொருள். அந்தச் சொல்லில் இருந்து செக்மெட் என்ற பெயர் தோன்றியது. வலிமையான சிங்கக் கடவுளாக இருப்பதால் இந்தப் பெயர் அவருக்குப் பொருந்தியது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Ancient Egypt: the Mythology - Sekhmet
- "Ancient war goddess statues unearthed in Egypt", archaeologists unearth six statues of the lion-headed war goddess Sekhmet in temple of pharaoh Amenhotep III. 2006-03-06
- "Karl Vincent: Vampire Hunter" series