செல்லையா இராசதுரை

செல்லையா இராசதுரை (Chelliah Rajadurai, பிறப்பு: 27 யூலை 1927[1]) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

செ. இராசதுரை
C. Rajadurai

நாஉ
மட்டக்களப்பு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1956–1989
முன்னவர் ஆர். பி. கதிராமர்
மட்டக்களப்பு மாநகர சபையின் 1வது முதல்வர்
பதவியில்
1967–1968
பின்வந்தவர் ஜே. எல். திசவீரசிங்கி
தனிநபர் தகவல்
பிறப்பு 27 சூலை 1927 (1927-07-27)
சிங்களவாடி, மட்டக்களப்பு, இலங்கை
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி
வாழ்க்கை துணைவர்(கள்) இராஜலட்சுமி
இனம் இலங்கைத் தமிழர்

வாழ்க்கைச் சுருக்கம்

இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.[2]

அரசியலில்

இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5][6][7] தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8]

1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1979 மார்ச் 7 இல் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.[9][10][11] பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.[12]. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.

இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.[13]

எழுதிய நூல்கள்

  • ராசாத்தி – குறும் புதினம் - 1982
  • பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு
  • அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
  • மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு
  • இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்

விருதுகள்

  • இலக்கிய கலாநிதிப் பட்டம் - மதுரைப் பல்கலைக்கழகம்
  • சொல்லின் செல்வர்

சமூகப் பணிகள்

  • இவர் அமைச்சராகப் பதவியில் இருந்த் போது சுவாமி விபுலாநந்தரைத் தேசிய வீரராக அறிவித்து அஞ்சல் தலை வெளியிட்டார்.
  • விபுலாநந்தரின் மதங்கசூளாமணியை மறுபதிப்புச் செய்து வெளியிட்டார்.

மேற்கோள்கள்

  1. "Rajadurai, Chelliah". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. Sri Kantha, Sachi. "One Hundred Tamils of the 20th Century: V.Navaratnam". Tamil Nation.
  3. "Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  8. "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  9. Rajasingham, K. T.. "Chapter 27: Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/DB16Df06.html.
  10. Wickramasinghe, Wimal (15 யனவரி 2008). "Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka". தி ஐலண்டு. http://www.island.lk/2008/01/15/features1.html.
  11. Jayawarden, Kishali Pinto (7 ஏப்ரல் 2002). "That conscience Bill coming again". சண்டே டைம்ஸ். http://www.sundaytimes.lk/020407/focus.html.
  12. "TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna". தமிழ்நெட். 23 ஏப்ரல் 2012. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120.
  13. "History of Municipal Council". மட்டக்களப்பு மாநகர சபை.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.