சூலு இனக்குழு

சூலு இனக்குழு தென்னாப்பிரிக்காவில் வாழும் மிகப் பெரிய இனக்குழு ஆகும். தென்னாபிரிக்காவின், குவாசூலு-நேட்டால் மாகாணத்தில் வாழும் இவர்களின் மக்கள்தொகை 10 - 11 மில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா தவிர, சிம்பாப்வே, சாம்பியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளிலும் சிறுபான்மையினராக இவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பேசும் இசிசூலு மொழி ஒரு பான்டு மொழியாகும். குறிப்பாக, இது ங்குனி துணைக்குழுவைச் சேர்ந்தது. சூலு அரசு, 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் தென்னாபிரிக்க வரலாற்றில் முன்னணிப் பங்காற்றியது. இன ஒதுக்கல் கொள்கை நிலவிய காலத்தில், சூலு மக்கள் மூன்றாம்தரக் குடிமக்களாகக் கருதப்பட்டு, வெள்ளையர் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய இனப்பாகுபாட்டினால் அல்லலுற்றனர். விடுதலை பெற்ற தென்னாபிரிக்காவில் இவர்கள் ஏனைய எல்லா இனக்குழுவினருடனும் சம உரிமை பெற்றவர்களாக விளங்குகின்றனர்.

சூலு
சூலு போராளிகள், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
(பின்னணியில் ஐரோப்பியர்)
மொத்த மக்கள்தொகை
10,659,309 (2001 கணக்கெடுப்பு)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 தென்னாப்பிரிக்கா
குவாசூலு-நேட்டால்7.6 மில்லியன்[1]
கௌட்டெங்1.9 மில்லியன்[1]
ம்புமாலங்கா0.8 மில்லியன்[1]
Free State0.14 மில்லியன்[1]
மொழி(கள்)
சூலு
(பலர் ஆங்கிலம் அல்லது ஆப்ரிகானாஸ் அல்லது போத்துக்கேயம் அல்லது க்சோசா போன்ற ஏனைய உள்நாட்டு மொழிகளையும் பேசுகின்றனர்
சமயங்கள்
கிறிஸ்தவர், ஆபிரிக்க மரபுவழிச் சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பாண்டு · ங்குனி · பாசோத்தோ · க்சோசா · சுவாஸி · மாதாபேலே · கோயிசான்

மேலும் பார்க்க

  1. South Africa grows to 44.8 million, on the site southafrica.info published for the International Marketing Council of South Africa, dated 9 July 2003, retrieved 4 March 2005.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.