சூரியனின் நகரம்
சூரியனின் நகரம் (The City of the Sun; இத்தாலியம்: La città del Sole; இலத்தீன்: Civitas Solis) என்பது டொமினிக்கன் மெய்யியலாளரான தொம்மாசோ கம்பனெல்லா என்பவர் எழுதிய மெய்யியல் ஆக்கம் ஆகும். இது ஒரு தொடக்ககாலக் கற்பனை சார்ந்த ஆக்கம். இது 1602ல், எசுப்பானிய ஆட்சிக்கு எதிராகச் சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கம்பனெல்லா சிறையில் இருந்த போது இத்தாலிய மொழியில் எழுதப்பட்டது. இதன் இலத்தீன் வடிவம் 1613-14ல் எழுதப்பட்டு 1623ல் பிராங்க்போர்ட்டில் வெளியானது.[1]
![]() | |
நூலாசிரியர் | தொம்மாசோ கம்பனெல்லா |
---|---|
உண்மையான தலைப்பு | Civitas Solis |
மொழி | இத்தாலியம் |
வகை | Utopian fiction |
வெளியிடப்பட்ட திகதி | 1602 |
சுருக்கம்
இந்நூல் உரையாடல் வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. பிளேட்டோவின் குடியரசு, அவர் எழுதிய தைமீயசில் உள்ள அத்திலான்டிசின் விபரிப்பு என்பவற்றால் தூண்டப்பட்ட இந்நூல், இறையாட்சிச் சமூகம் ஒன்றை விபரிக்கிறது. இதில், பொருட்கள், பெண்கள், பிள்ளைகள் என்பன பொதுவானவை. அரபு மொழியில் எழுதப்பட்ட "பிக்காட்ர்க்சு" என்னும் மந்திர நூலில் வரும் அடோசென்டின் என்னும் நகரத்தையும் இது ஓரளவுக்கு ஒத்தது. இசுப்பானிய அரசர்கள், பாப்பாண்டவருடன் சேர்ந்து உண்மையான சமயம் வெற்றியடைவதற்கும், அது உலகம் முழுவதும் பரவுவதற்குமான இறைவனின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கருவிகள் ஆவர் என "சூரிய நகரம்" நூலின் இறுதிப் பகுதியில், கம்பனெல்லா கூறுகிறார்.
நகரம்
இந்த நூலில் வரும் "சூரிய நகரம்" இந்நகரம் ஏழு சுற்றுக்களாக அமைந்த வளையங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வளையங்கள், சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைத் தழுவிப் பெயரிடப்பட்டு உள்ளன.[2] இங்கே மக்கள் வாழ்வதற்கான மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. உடல் நலத்தைத் தரக்கூடிய வகையில் இந்நகரம் பொருத்தமான அமைவிடத்தில் உள்ளது. சுத்தமான காற்றுக் கிடைக்கும் வகையில் மலைச் சரிவில் இது அமைந்திருக்கிறது.
குறிப்புகள்
- Tommaso Campanella in "Stanford Encyclopedia of Philosophy". 22 அக்டோபர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- Campanella, Tommaso., The City of the Sun, குட்டன்பர்க் திட்டம்.
வெளியிணைப்புக்கள்
- The City of the Sun at குட்டன்பேர்க் திட்டம் (ஆங்கில மொழியில்)
- The City of the Sun at eBooks@Adelaide (ஆங்கில மொழியில்)
- The City of the Sun at "LibriVox" (ஒலிநூல்)
- from "La città del sole": "Tutte le cose son communi" MP3 ஒலிக்கோப்பு (ஆங்கில மொழியில்)
- Ernst, Germana, "Tommaso Campanella", The Stanford Encyclopedia of Philosophy (Fall 2010 Edition), Edward N. Zalta (ed.).