சுஸ்ருதர்

சுசுருதர் (Sushruta;சமஸ்கிருதம்:. सुश्रुत (sʊʃɾʊt̪),கி. மு. 800) இந்தியாவின் பண்டைய ஆயுர்வேத மருத்துவர். கி.மு 800 ஆம் ஆண்டில் வாரணாசி நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படுகிறார்.[1] [2] இவர் அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படுகிறார். ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த சுஸ்ருத சம்ஹிதை என்ற ஒரு மருத்துவ நூலை இயற்றியவர். சுஸ்ருத சம்ஹிதை நூல் 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதில் 1120 நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள், 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும் அவற்றை சிகிச்சையில் பயன் படுத்தும் விதங்களையும் பற்றி கூறியுள்ளார்[1].

அரித்துவாரில் உள்ள பதஞ்சலி யோகபீடத்தில் சுசுருதரின் சிலை

இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர். பாரதத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் பழங்காலத்திலேயே நுண்ணிய மூளை மண்டல பகுதி அறுவை சிகிச்சையை செய்தவர். உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தற்காலிகமாக உணர்வினை இழக்கச்செய்யும் முறையையும் இவர் பயன்படுத்தியுள்ளார்.இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.[3]

நூலின் அமைப்பு

சுஸ்ருத சம்ஹிதை பூர்வ தந்திரம், உத்திர தந்திரம் எனும் இரு பகுதிகளைக் கொண்டது. இதில் பூர்வதந்திரத்திலே சீத்திரஸ்தானம், நிதானஸ்தானம், சரீரஸ்தானம், கல்பஸ்தானம், சிகிச்சாஸ்தானம் எனும் ஐந்து பிரிவுகள் உள்ளன. இவை சுஸ்ருத சம்ஹிதையின் மூல நூலாகிய ஸல்லிய தந்திரத்தில் உள்ளவையாகும். உத்தர தந்திரத்தில் ஸலக்கியம், பூத வித்தியா, கமார பிருத்தியம் எனும் மூன்று பகுதிகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Dwivedi & Dwivedi (2007)
  2. Lock etc., page 420
  3. குமுதம் ஜோதிடம்; 31.07.2009

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.