சுவெத்லானா அலிலுயேவா
சுவெத்லானா இயோசிஃபோவ்னா அலிலுயேவா (Svetlana Iosifovna Alliluyeva, சியார்சிய: სვეტლანა ალილუევა, உருசியம்: Светлана Иосифовна Аллилуева, அல்லது லானா பீட்டர்ஸ் (Lana Peters) (பெப்ரவரி 28, 1926 - நவம்பர் 22, 2011), என்பவர் சோவியத் தலைவர் யோசப் ஸ்டாலினின் கடைசிப் பிள்ளையும் ஒரே மகளும் ஆவார். இவர் ஸ்டாலினுக்கும் அவரது இரண்டாவது மனைவி நஜியெஸ்தா அலிலுயேவா என்பவருக்கும் பிறந்தவர். 1967 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்று அமெரிக்கக் குடிமகள் ஆனார்[1].
சுவெத்லானா இயோசிஃபோவ்னா ஸ்டாலினா სვეტლანა ალილუევა Светлана Иосифовна Аллилуева Svetlana Iosifovna Stalina | |
---|---|
![]() 1935 இல் யோசெப் ஸ்டாலினுடன் சுவெத்லானா. | |
பிறப்பு | சுவெத்லானா ஸ்டாலினா பெப்ரவரி 28, 1926 மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் |
இறப்பு | நவம்பர் 22, 2011 85) விஸ்கான்சின், ஐக்கிய அமெரிக்கா | (அகவை
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | சுவெத்லானா அலிலுயேவா, லானா பீட்டர்ஸ் |
பணி | எழுத்தாளர், விரிவுரையாளர் |
அறியப்படுவது | யோசப் ஸ்டாலினின் மகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.