சுதா மூர்த்தி
சுதா குல்கர்ணி மூர்த்தி (Sudha Murthy; கன்னடம்: ಸುಧಾ ಮೂರ್ತಿ,பி:ஆகத்து 19, 1950) இந்திய சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆவார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நா. ரா. நாராயண மூர்த்தியின் மனைவி. சுதா தனது பணிவாழ்வை கணினியியலாளராகத் துவங்கினார். இன்று இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவியாக உள்ளார். தவிர கேட்சு அறக்கட்டளையின் பொதுமக்கள் நல்வாழ்வு செயலாக்கத்தில் உறுப்பினராக உள்ளார்.[1][2] மேலும் சுதா பல அனாதை இல்லங்கள், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றிற்கு பங்களித்துள்ளார். கருநாடக அரசுப் பள்ளிகளில் மடிக்கணினி வழங்கவும் நூலக வசதிகளை அமைக்கவும் உருவான இயக்கத்திற்கு உறுதுணையாயுள்ளார்.[3][4]
சுதா மூர்த்தி | |
---|---|
![]() | |
பிறப்பு | சுதா குல்கர்ணி ஆகத்து 19, 1950 சிக்காவுன், கருநாடக மாநிலம், இந்தியா |
இருப்பிடம் | பெங்களூரு, கர்நாடகம், இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பாரதிய வித்யா பவன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இந்திய அறிவியல் கழகம் |
பணி | தலைவர், இன்ஃபோசிஸ் |
வாழ்க்கைத் துணை | நா. ரா. நாராயண மூர்த்தி |
இவரது உடன்பிறப்புகளான மரு.சுனாந்தா குல்கர்ணி, ஜெயஸ்ரீ தேஷ்பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் குல்கர்ணியும் பரவலாக அறியப்பட்டவர்கள்; மரு. சுனந்தா பெங்களூருவின் முன்னணி குழந்தைப்பேறு மருத்துவர்; ஜெயஸ்ரீ தொலைதொடர்பு முனைப்பாளரும் பெருஞ்செல்வருமான அமெரிக்கர் குருராஜ் தேஷ்பாண்டேயின் மனைவியாவார்; ஸ்ரீனிவாஸ் கால்டெக்கின் வானியல் அறிவியலாளராவார்.[5]
அவரது நூல்கள்
சுதா மூர்த்தி ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் பல புதினங்களை எழுதியுள்ளார். அவரது சில நூல்கள்:
ஹௌ ஐ டாட் மை கிராண்ட்மதர் டு ரீட் & பிற கதைகள்
வைஸ் & அதர்வைஸ்: வாழ்விற்கொரு வணக்கம்
த பேர்ட் வித் த கோல்டன் விங்ஸ்
ஜென்ட்லி ஃபால்ஸ் த பகூலா
டாலர் பகு
மகாஸ்வேதா
தி ஓல்டு மேன் & ஹிஸ் காட்
மாஜிக் டிரம் & அதர் ஃபேவரைட் ஸ்டோரீஸ்
பாசல் கட்
எ வெட்டிங் இன் ரஷ்யா
ஸ்வீட் ஹாஸ்பிடாலிடி
விருதுகள்
- 2004இல் ராசா-லட்சுமி விருது, சென்னை.[6]
- 2006இல் இந்திய அரசின் பத்ம சிறீ விருது
- 2011இல் கௌரவ முனைவர் பட்டம்[7]
மேற்கோள்கள்
- Ratan Tata, Rahul Dravid on Gates Foundation board. tata.com (2003-07-15). Retrieved on 2011-12-08.
- Gates Foundation's AIDS initiative launched. The Hindu (2003-12-06). Retrieved on 2011-12-08.
- Sudha Murthy: Humility personified. Business-standard.com (2011-01-23). Retrieved on 2011-12-08.
- I'm enjoying my acting stint: Sudha Murthy – Times Of India. Timesofindia.indiatimes.com. Retrieved on 2011-12-08.
- A star called Kulkarni. Rediff.com (2004-12-31). Retrieved on 2011-12-08.
- National : Raja-Lakshmi Award for Sudha Murty. The Hindu (2004-08-15). Retrieved on 2011-12-08.
- Santosh Hegde, Sudha Murthy to be conferred honorary doctorate. Deccanherald.com. Retrieved on 2011-12-08.
வெளி இணைப்புகள்
- http://www.karnataka.com/personalities/sudha-murty/ சுதா மூர்த்தி - ஓர் அறிமுகம்] (ஆங்கில மொழியில்)
- ராஜலட்சுமி விருது (ஆங்கில மொழியில்)