சுங்கை ஊஜோங்

சுங்கை ஊஜோங் என்பது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருக்கும் ஒரு மாவட்டம் ஆகும். வரலாற்றின் பின்னணியில் நெடும் காலமாக, சுங்கை ஊஜோங்நெகிரி செம்பிலான் மாநிலத், ஒரு மாநிலமாகவே கருதப்பட்டு வந்தது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், அது ஒரு தனி அரசாங்கமாகவும் இயங்கி வந்தது. சுங்கை ஊஜோங் மிகப் பழமையான வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டது.

1760ஆம் ஆண்டுகளில் இருந்து, 11 ஆளுநர்கள் அந்த மாவட்டத்தை ஆட்சி செய்து உள்ளனர். அந்த ஆளுநர்களை ’உண்டாங்’ என்று அழைப்பார்கள். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நான்கு உண்டாங்குகள் இருக்கின்றனர். இந்த நால்வரில் ஓர் உண்டாங்தான், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுல்தானாக தேர்வு செய்யப்பட்டு, ஆட்சி செய்வார்.[1]

இந்த மாநிலத்தின் தலைவரைச் சுல்தான் என்று அழைப்பது இல்லை. அவரை யாங்-டி-பெர்த்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்று அழைப்பார்கள். டத்தோ கிளானா பெட்ரா ஸ்ரீ ஜெயா எனும் ஆளுமைப் பெயர், 1769ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானிடம் இருந்து கிடைக்கப் பெற்றதாகும்.

முன்பு, நெகிரி செம்பிலான் மாநிலத்தை, சுங்கை ஊஜோங் என்று அழைத்தார்கள். [2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.