சு. நடராஜா

சுப்பிரமணியம் நடராஜா (Subramaniam Nadarajah, இறப்பு: 12 பெப்ரவரி 1988) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை செனட் சபை உறுப்பினரும் ஆவார்.

எஸ். நடராஜா
S. Nadarajah
இலங்கை செனட் சபை உறுப்பினர்
பதவியில்
1965–1971
தலைவர், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபை
பதவியில்
1981–1983
தனிநபர் தகவல்
இறப்பு 12 பெப்ரவரி 1988(1988-02-12)
அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
பிற அரசியல்
சார்புகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி
தொழில் வழக்கறிஞர்
இனம் இலங்கைத் தமிழர்

"பொட்டர்" நடராஜா என அழைக்கப்படும் சுப்பிரமணியம் நடராஜா அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஒரு மூத்த உறுப்பினர் ஆவார்.[1] 1961 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து பணியாற்றினார்.[2] 1965 முதல் 1971 வரை இலங்கை செனட் சபை உறுப்பினராகப் பணியாற்றினார்.[1]

1981 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் உருவாக்கப்பட்ட போது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] மாவட்ட சபைக்கு "கதிரைகளும் மேசைகளும் வாங்குவதற்குக்கூட" தமக்கு அதிகாரம் தரப்படவில்லை எனக் கூறி தனது பதவியை இவர் 1983 ஆம் ஆண்டில் துறந்தார்.[5][6]

படுகொலை

1988 பெப்ரவரி 12 இல் தனது 72 ஆவது அகவையில் நடராஜா யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] இந்திய அமைதி காக்கும் படையினருடன் தொடர்பு பேணியமைக்காக ஈழ இயக்கங்களுள் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இப்படுகொலையை நிகழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.