சீர்திருத்தம் (மலேசியா)
மலேசியாவில் சீர்திருத்த இயக்கம் (Reformasi movement) 1998 ல் அன்வார் இப்ராகிம் துணை பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டபோது அவரது ஆதரவாளர்கள் மூலம் தொடங்கப்பட்டது. இது நீண்டகால கூட்டணி பாரிசான் நேசனல் அரசுக்கு எதிராக பல வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியது. அன்வார் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது வரை தொடர்ந்தது. [1] இந்த இயக்கம் பின்பு மக்கள் நீதிக் கட்சி ஆக மாறியது. 2008 மலேசிய பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையில் 31 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. இக்கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் ஆழும் பாரிசான் நேசனல் அரசை, 1969 க்குப்பின் முதல் முறையாக, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழக்க வைத்தது.