சீயர்லசைட்டு

சீயர்லசைட்டு (Searlesite) என்பது NaBSi2O5(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சோடியம் போரோ சிலிக்கேட்டு என்று இது வகைப்படுத்தப்படுகிறது. 1914 ஆம் ஆண்டு கலிபோர்னியாவிலுள்ள சீயர்லசு ஏரியில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. சீயர்லசைட்டை முதன் முதலில் கண்டறிந்த கலிபோர்னிய முன்னோடியான யான் டபிள்யூ. சீயர்லெசு (16 நவம்பர் 1928 முதல் 7 அக்டோபர் 1897 வரை) என்பவரை கௌரவிக்கும் விதமாக கனிமத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.

சீயர்லசைட்டு
Searlesite
வயோமிங்கு பச்சை ஆற்றுக்கு அருகில் சீயர்லசைட்டு
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுNaBSi2O5(OH)2
இனங்காணல்
நிறம்வெண்மை, இளம் பழுப்பு
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
மோவின் அளவுகோல் வலிமை1-2
மிளிர்வுபளபளப்பு
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.516 nβ = 1.531 nγ = 1.535
இரட்டை ஒளிவிலகல்δ = 0.019

பொதுவாக சீயர்லைட்டு ஏரிப்படிவு அடுக்குகளில் பரவலாக காணப்படுகிறது, மேலும் பெரும்பாலும் எரிமலை சாம்பலுடன் சேர்ந்த தொடர்புடையதாகவும் போரேட்டு படிவுகளில் சிறுபான்மையளவிலும் காணப்படுகிறது. அரிதாகவே செறிவூட்டப்பட்ட அல்லது இயல்பான படிகங்களில் சீயர்லசைட்டு காணப்படுகிறது. எனவே போரானின் ஒரு தாதுக் கனிமமாக இது வளர்வதில்லை. எண்ணெய் களிமண் பாறைகள் அல்லது களிமண் பாறைகள் (பச்சை ஆறு உருவாக்கம், அமெரிக்கா), போரானைக் கொண்டுள்ள ஆவியாகும் படிவுகள், (கலிபோர்னியா), அரிதாக நியூ மெக்சிகோவின் எரிமலைப் பாறைகளில் இது கிடைக்கிறது.

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.