சிவாய சுப்பிரமணியசுவாமி

சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி (Sivaya Subramuniyaswami, ஜனவரி 5, 1927, கலிபோர்னியா - நவம்பர் 12, 2001, ஹவாய்), ஆங்கிலேயராகப் பிறந்த இந்து சமய அமெரிக்க ஆன்மீகவாதி ஆவார். இவரது இயற்பெயர் ரொபேர்ட் ஹான்சன். இவர் "குருதேவா" என இவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர். யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியின் சீடர். 1970களில் ஹவாயில் கௌவாஹி (kauai) தீவில் சைவ சித்தாந்த ஆதீனம் என்ற பெயரில் ஒரு கோயிலை ஆரம்பித்து "இந்து சமயம் இன்று" (Hinduism Today) என்ற ஆங்கில மாதிகையை வெளியிட ஆரம்பித்தார். இந்து சமயம் தொடர்பாகப் பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயராகப் பிறந்து இந்துவாக வாழ்ந்தவர்[1].

சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி
Satguru Sivaya Subramuniyaswami
பிறப்புசனவரி 5, 1927(1927-01-05)
ஓக்லாந்து, கலிபோர்னியா,  ஐக்கிய அமெரிக்கா
இறப்பு12 நவம்பர் 2001(2001-11-12) (அகவை 74)
காப்பா, ஹவாய்,  ஐக்கிய அமெரிக்கா

இவருக்கு அடுத்த சிவ சித்தாந்த யோக மரபு குரு சத்குரு போதிநாத வேலன்சாமி ஆவார். இவரே இன்று கௌவாஹி ஆதீனத்தை ஏற்று நடத்துகிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

படிமங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.