சில்ஹெட்

சில்ஹெட் (Sylhet,வங்காள: সিলেট சிலெட்டு) அல்லது ஜலாலாபாத் வங்காளதேசத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகர்புறப் பகுதியாகும். இது "அசரத் ஷாஜலால் நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது வங்காளதேசத்தின் மிகச் செல்வச்செழிப்பான நகரங்களில் ஒன்றாகும். சில்ஹெட் மாவட்டம் மற்றும் சில்ஹெட் கோட்டத்தின் நிர்வாக தலைநகரமாகவும் விளங்குகிறது. இந்த நகரம் சூர்மா ஆற்றங்கரையில் சூர்மா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 500,000 ஆகும்.

சில்ஹெட்
সিলেট
பெருநகரம்
சில்ஹெட் நகரம்
நாடு வங்காளதேசம்
கோட்டம்சில்ஹெட் கோட்டம்
மாவட்டம்சில்ஹெட் மாவட்டம்
பெருநகர் பகுதி நகரம்31 மார்ச் 2009[1]
சில்ஹெட் மாநகராட்சி9 ஏப்ரல் 2001
நகராட்சி வாரியம்1867
அரசு
  வகைநகரத்தந்தை-நகரமன்றம்
  Bodyசில்ஹெட் மாநகராட்சி
  நகரத்தந்தைஅரிஃபுல் அக் சௌத்திரி
பரப்பளவு
  மொத்தம்[.50
ஏற்றம்35
மக்கள்தொகை (2010)
  மொத்தம்4,32,106
  அடர்த்தி17,479
  மக்களினம்[2]94
Demographics
  LanguagesSylheti Bengali, Standard Bengali
  Literacy rate71.84%[3]
நேர வலயம்BST (ஒசநே+6)
அஞ்சல் குறியீடு3100
இணையதளம்sylhetcitycorporationbd.com

வங்காளதேசத்தில் இது ஐந்தாவது பெரிய நகரமாகும். இங்கு வங்காளத்திலும் தெற்காசிய துணைக்கண்டத்திலும் மிகவும் மதிக்கப்படுகின்ற சுஃபிக்கள் ஷா ஜலால் மற்றும் ஷா பாரென் தர்காக்கள் அமைந்துள்ளன. இவற்றிற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.[4] சில்ஹெட் மழைக்காடுகளும் அருவிகளும், குன்றுகளும் ஆற்றுப் பள்ளத்தாக்கும் அடங்கிய இயற்கையழகிற்காகவும் பெயர் பெற்றது.

வங்காளதேசத்தின் தேயிலைத் தோட்டங்கள் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள சில்ஹெட்டில் தேயிலை முக்கியத் தொழிலாக இருக்கிறது. வங்காளதேசத்தின் எண்ணெய்/இயற்கைவாயு மையமாகவும் சில்ஹெட் விளங்குகிறது. வரலாற்றின்படி சில்ஹெட் வங்காளம் மற்றும் அசாமின் பல்வேறு இராச்சியங்கள்/சுல்தானியகங்களின் அங்கமாக இருந்துள்ளது. பிரித்தானிய ஆட்சியில், வடகிழக்கு இந்தியாவின் யுக்திமிக்க மலைவாழிடமாக சில்ஹெட் விளங்கியது.[4]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சில்ஹெட்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.