கட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு
கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கு (Urinary incontinence, UI) என எந்தவொரு தன்னிச்சையான சிறுநீர் கசிவும் குறிப்பிடப்படுகிறது. வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கின்ற ஒரு மிக பொதுவான மற்றும் மனத்தகைவு ஏற்படுத்துகின்ற ஓர் சிக்கலாக இது அமைந்துள்ளது. இதன் பின்னணியில் குணப்படுத்தக்கூடிய மருத்துவ நிலை இருப்பினும் பெரும்பாலும் இது மருத்துவர்களிடம் வெளிப்படுத்தப்படுவதில்லை.[1]
கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | சிறுநீரியல் |
ஐ.சி.டி.-10 | N39.3-N39.4, R32. |
ஐ.சி.டி.-9 | 788.3 |
நோய்களின் தரவுத்தளம் | 6764 |
MedlinePlus | 003142 |
ஈமெடிசின் | med/2781 |
Patient UK | கட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு |
MeSH | D014549 |
காரணிகள்
பெண்களிடம் கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கிற்கு பொதுவான காரணங்களாக தகைவு சிறுநீர்ப்போக்கும் தூண்டு சிறுநீர்ப்போக்கும் உள்ளன. இரண்டு சிக்கல்களும் உள்ளப் பெண்களுக்கு கலவை சிறுநீர்ப்போக்கு உள்ளது. தகைவு சிறுநீர்ப்போக்கு சிறுநீர்வழிக்கு ஆதாரம் இல்லாமையால் ஏற்படுவது; இது பிறப்பின்போதே இடுப்பறை கட்டமைப்பு சேதமடைவதால் இருக்கலாம். இருமல், தும்மல் மற்றும் தூக்குதல் போன்ற வயிற்று அழுத்தத்தை கூடுதலாக்கும் எந்த செயலின்போதும் சிறுசிறு துளிகளாக வெளியேறுவது இதன் இயல்பாக அமைந்துள்ளது.
சான்றுகோள்கள்
- "Managing Urinary Incontinence". National Prescribing Service, available at http://www.nps.org.au/health_professionals/publications/nps_news/current/nps_news_66_managing_urinary_incontinence_in_primary_care