சிறுநீரகக் கல்
சிறுநீரகக் கல் (Kidney stone) உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி வலியை உண்டாக்கும்.
சிறுநீரகக் கல் Classification and external resources | |
![]() | |
---|---|
8-mm சிறுநீரகக் கல் | |
ஐ.சி.டி.-10 | N20.0 |
ஐ.சி.டி.-9 | 592.0 |
DiseasesDB | 11346 |
MedlinePlus | 000458 |
ஈமெடிசின் | med/1600 |
MeSH | D007669 |
நாள்தோறும் போதிய அளவு நீர் அல்லது பால் குடித்து வந்தால் இந்நோயைக் குறைக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது. சிறுநீரகம், இரத்தத்திலிருந்து தேவையற்ற பொருள்களை வடிகட்டிச் சிறுநீராக மாற்றி வெளித்தள்ளுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு ஒருமனிதனின் சிறுநீரகங்கள் ஒன்றறை லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. புரத வளர்சிதை மாற்றத்திற்குப் பிறகு எஞ்சுகின்ற யூரிக் அமிலம், பாஸ்பேட், ஆக்ஸலேடர், போன்ற கழிவுப் பொருள்களை வெளியேற்றுவது சிறுநீரின் முக்கிய வேலைகளில் ஓன்று. இவை சரிவர வெளியேற்றப்படவில்லை என்றாலோ, தேவைக்கு அதிகமான கழிவுப்பொருள்கள் உடலில் தேங்கினாலோ சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். சிறுநீரகத்தில் அமிலத்தன்மை அதிகரித்தால் யூரிக் கற்கள் உருவாகும். காரத்தன்மை அதிகரித்தால், பாஸ்பேட் அல்லது சுண்ணாம்புக் கற்கள் உருவாகும். தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் சிறுநீரகக் கற்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.
சிறுநீரகக் கற்கள் வருவதற்கான காரணம்
கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் வெளியேறாமலும் இருப்பதன் மூலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படலாம். தைராய்டு சுரப்பியின் சுரப்பு அதிகமானாலும் இப்பிரச்சினை ஏற்படலாம். நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உணவுகளில் காரத்தன்மையும் அமிலத்தன்மையும் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். தேநீர் அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகக்கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகிறது. குடிநீரில் கலந்திருக்கும் வேதிப்பொருள்களாளும், அதிக அசைவ உணவை எடுத்துக் கொள்வதாலும்கூட சிறுநீரகக்கற்கள் ஏற்படலாம்.
சிகிச்சை முறை
உணவில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவும், புயூரினின் அளவும் குறைவாகவே இருக்கவேண்டும். இத்துடன் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்தை அதிகம் சேர்த்துதுக் கொள்ளகூடாது. உணவு மூலமாக ஏற்கனவே உருவான கற்களை நீக்க இயலாது. ஆனால், புதியதாக கற்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள உணவுப் பொருள்கள்
அகத்திக் கீரை, முருங்கை இலை, பால், தயிர், கசகசா பொடி, மீன், இறால், நண்டு, கேழ்வரகு, சோயா, எள்.
பாஸ்பேட் அதிகம் காணப்படும் உணவுகள்
தானிய வகைகள், கொட்டைகள், எண்ணெய் வித்துக்கள், கேரட், பால், பாலைச் சார்ந்த உணவுகள், முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள்.
ஆக்ஸலேட்
கீரைவகைகள், டீ, காபி, கோகோ, சாக்லேட், பீட்ருட், முந்திரி, கருணைக்கிழங்கு, பீன்ஸ். நேல்லிக்காய், அத்திப்பழம், வெண்டைக்ககாய், பாதாம்.
பியூரின் அதிகம் உள்ள உணவு
ஆட்டு ஈரல், மூளை, சிறுநீரகம், மீன், இறைச்சி சூப் [1]
இவற்றையும் பார்க்கவும்
ஆதாரம்
- Puplisher Badri Seshadri, Nalam, New Harison Media Pvt. Ltd. Chennai- 18 Website : www.nhm.in