சிம்பாப்வெயிட்டு

சிம்பாப்வெயிட்டு (Zimbabweite) என்பது (Na,K)2PbAs4(Nb,Ta,Ti)4O18 [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பொதுவாக ஆர்சனைட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்பட்டாலும் இதில் நையோபியம் மற்றும் டாண்ட்டலம் தனிமங்களும் கலந்துள்ளன. மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும் இக்கனிமம் செஞ்சாய்சதுர வடிவில் படிகமாகிறது. மோவின் அளவுகோலில் சிம்பாப்வெயிட்டின் கடினத்தன்மை மதிப்பு 5 ஆகும். 1986 ஆம் ஆண்டு சிம்பாப்வே நாட்டில் வானிலையால் பாதிக்கப்பட்ட களிமண்ணால் உருவாகிய வெண்களிமண் தீப்பாறைகளில் சிம்பாப்வெயிட்டு கண்டறியப்பட்டது [1].

சிம்பாப்வெயிட்டு
Zimbabweite
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடு(Na,K)2PbAs4(Nb,Ta,Ti)4O18
இனங்காணல்
நிறம்மஞ்சள், மஞ்சள் பழுப்பு
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மிளிர்வுஅடமன்டைன்
மேற்கோள்கள்[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.