சிமிகோட்
சிமிகோட் (Simikot) நேபாள நாட்டின் மேற்கில் உள்ள மாநில எண் 6ல் உள்ள ஹும்லா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இம்மாவட்டம் நேபாளத்தின் இமயமலைத் தொடரில் உள்ளது. நேபாள தேசியத் தலைநகரம் காட்மாண்டு நகரத்திற்கு வடமேற்கே 263 மைல் (423 கிமீ) தொலைவில், இமயமலையில் 2910 மீட்டர் உயர்த்தில் சிமிகோட் நகரம் உள்ளது. கைலாஷ் மானசரவோர் யாத்திரை செல்வோர் சிமிகோட் நகரத்தின் வழியாக செல்வர்.[1]
சிமிகோட் सिमिकोट | |
---|---|
மாவட்டத் தலைமையிடம் | |
![]() | |
![]() ![]() சிமிகோட் | |
ஆள்கூறுகள்: 29°58′18″N 81°49′15″E | |
நாடு | ![]() |
மாநிலம் | மாநில எண் 6 |
மாவட்டம் | ஹும்லா |
ஏற்றம் | 2,910 |
நேர வலயம் | நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45) |
இணையதளம் | http://simkotmun.gov.np/ |
போக்குவரத்து
2,910 மீட்டர் உயரத்தில் உள்ள சிமிகோட் வானூர்தி நிலையம் 549 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுபாதை கொண்டது. [2] [3] சிமிகோட் வானூர்தி நிலையத்திலிருந்து காத்மாண்டு, நேபாள்கஞ்ச் போன்ற நகரங்களுக்கு வானூர்தி சேவைகள் உண்டு. [4]
இதன் அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
மேற்கோள்கள்
- Thubron, Colin (2011). To a Mountain in Tibet. New York: Harper Collins. http://www.harpercollins.com/browseinside/index.aspx?isbn13=9780061768262. பார்த்த நாள்: Dec 14, 2013.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.