சின்சோ அபே

ஷின்சோ அபே (யப்பானிய மொழி:安倍 晋三 Abe Shinzo பிறப்பு: செப்டம்பர் 21 1954) யப்பானிய அரசியல்வாதியாவார். செப்டம்பர் 20 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார்.[2] இவரது கட்சி யப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது. இவர் ஜப்பானின் 90-வது பிரதமர். செப்டம்பர் 12, 2007 இவர் பதவியிலிருந்து அகற்றி யாசுவோ ஃபுக்குடா புதிய பிரதமராக உறுதி செய்யப்பட்டார்.

安倍 晋三
ஷின்சோ அபே
90வது ஜப்பானியப் பிரதமர்
பதவியில்
26 செப்டம்பர் 2006  26 செப்டம்பர் 2007
அரசர் ஆக்கிஹீட்டோ
முன்னவர் ஜுனீச்சிரோ கொய்சுமி
பின்வந்தவர் யாசுவோ ஃபுக்குடா
மூத்த அமைச்சரவைச் செயலாளர்
பதவியில்
31 அக்டோபர் 2005  26 செப்டம்பர் 2006
பிரதமர் ஜுனீச்சிரோ கொய்சுமி
முன்னவர் ஹிரொயுக்கி ஹொசுடா
பின்வந்தவர் யசுஹிசா சியொசாக்கி
ஜப்பானியக் கீழவையின் உறுப்பினர்
யாமகூச்சியின் நான்காம் மாவட்டத்திலிருந்து தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996  இன்று
முன்னவர் புதிய பதவி
பின்வந்தவர் பத
பெரும்பான்மை 137,701 (73.62%)
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 21, 1954 (1954-09-21)
நகாட்டோ, யாமகூச்சி மாகாணம், ஜப்பான்
அரசியல் கட்சி தாராண்மை மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அக்கியே அபே
சமயம் பௌத்தம், ஷின்ட்டோ[1]

இவர் மிக இளவயதில் யப்பானிய பிரதமராகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமரும் ஆவார்.

மீண்டும் பிரதமர் பதவியில்

திசம்பர் 2015இல் நடந்த ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

ஆரம்ப வாழ்க்கை

அபே தெற்கு யப்பானின் நாகதோ என்னும் நகரில் பிறந்தார். 1977இல் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள தனியார் பல்கலைகழகமான செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். பின்னர் மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று தெற்கு கலிபோனிய பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஏப்ரல் 1979 தொடக்கம் கோபே உருக்கு தொழிற்சாலையில் பணியாற்றினார்[4]. 1982 இல் அங்கிருந்து விலகி அரசில் பல பணிகளை செய்தார்.[5]

ஆதாரங்கள்

  1. http://www.sinseiren.org/ouen/kokugikon.html; http://press.jodo.or.jp/press/2003/03/news.html
  2. Shinzo Abe to Succeed Koizumi as Japan's Next Prime Minister Bloomberg
  3. http://tamil24news.com/news/?p=48788 ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் சின்சோ அபே வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து
  4. Profile: Shinzo Abe பிபிசி செய்திகள்
  5. Shinzo Abe the Chief Cabinet Secretary சினோசோ அபேயின் தளம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.