சின் பெயின்

சின் பெயின் (Sinn Féin[2] என்பது அயர்லாந்துக் குடியரசு, வட அயர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும். சின் ஃபெயின் என்பது ஐரிய மொழியில் "நாம்" அல்லது "நாம் நாமே",[3][4] என்று பொருள். 1905 இல் ஆர்தர் கிரிஃபித் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட சின் பெயின் அமைப்பீல் இருந்து இது தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும், இது 1970 இல் கட்சியில் ஏற்பட்ட பிளவை அடுத்து அயர்லாந்து தொழிலாளர் கட்சி பிரிந்து போனதும், ஐரியக் குடியரசுப் படையுடன் இணைந்து இக்கட்சி தற்போதைய வடிவத்தை அடைந்தது.[5] 1983 முதல் ஜெரி ஆடம்சு இக்கட்சியின் தலைவராக இருந்து வருகிரார்.

சின் பெயின்
Sinn Féin
செயலாளர் நாயகம்டோன் டொயில்
நிறுவனர்ஆர்தர் கிரிஃபித்
தலைவர்ஜெரி ஆடம்சு
உப தலைவர்மேரி லோவ் மெக்டொனால்டு
பேரவைக் குழுத் தலைவர்ரேமண்ட் மெக்கார்ட்னி
குறிக்கோளுரை"சமவுரிமை கொண்ட அயர்லாந்தை உருவாக்குகிறோம்"
தொடக்கம்மூலம்: 28 நவம்பர் 1905
தற்போதையது: 1970
தலைமையகம்44 பார்னெல் சதுக்கம், டப்ளின், அயர்லாந்து
செய்தி ஏடுஆன் போபிளாக்ட்
இளைஞர் அமைப்புசின் பெயின் குடியரசு இளைஞர்
கொள்கைஐரியக் குடியரசு
சனநாயக சோசலிசம்[1]
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுஐரோப்பிய ஐக்கிய இடது-நோர்திக் இடது
நிறங்கள்Green
அயர்லாந்தின் கீழவை
14 / 166
அயர்லாந்தின் மேலவை
3 / 60
மக்களவை
(வ.அ. தொகுதிகள்)
4 / 18
ஐரோப்பிய நாடாளுமன்றம் (ஐரியக் குடியரசு)
3 / 11
ஐரோப்பிய நாடாளுமன்றம் (வட அயர்லாந்து)
1 / 3
வட அயர்லாந்து சட்டப்பேரவை
29 / 108
உள்ளூராட்சி (அயர்லாந்து)
159 / 949
உள்ளூராட்சி (வட அயர்லாந்து)
105 / 462
இணையதளம்
www.sinnfein.ie

வட அயரலாந்து சட்டப்பேரவையில் சின் பெயின் கட்சி இரண்டாவது பெரிய கட்சியாகும். கூட்டணி ஆட்சியில் இக்கட்சி நான்கு அமைச்சர்களைக் கொண்டுள்ளது. அயர்லாந்துக் குடியரசில் இது நான்காவது பெரிய கட்சியாகும். ஐக்கிய இராச்சியத்தின் 2015 பொதுத் தேர்தலில் இக்கட்சி வட அயர்லாந்தில் இரண்டாவது அதிக இடங்களையும், வாக்குகளையும் பெற்ற கட்சியாகத் திகழ்கின்றது.

மேற்கோள்கள்

  1. Parties and Elections in Europe: The database about parliamentary elections and political parties in Europe, by Wolfram Nordsieck
  2. "Sinn Féin: definition of Sinn Féin in Oxford dictionary (British & World English). Meaning, pronunciation and origin of the word". Oxford University Press (2013). பார்த்த நாள் 1 டிசம்பர் 2013.
  3. Niall Ó Dónaill (1977). (advisory ed. Tomás de Bhaldraithe). ed (in Irish). Foclóir Gaeilge-Béarla [Irish-English Dictionary]. Dublin: An Gúm. பக். 533, 1095. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85791-037-7.
  4. MacDonncha (2005), p.12
  5. "The political counterpart of PIRA": entry under Provisional Sinn Féin, W.D. Flackes & Sydney Elliott (1994) Northern Ireland: A Political Directory 1968–1993. Belfast: Blackstaff Press

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.