சின் பெங்
சின் பெங், (சீனம்:陈平) (பிறப்பு:1924 - இறப்பு: 16 செப்டம்பர் 2013) என்பவர் மலேசியா, பேராக், சித்தியவான் எனும் நகரில் பிறந்தவர். இவருடைய முழுப்பெயர் ஓங் பூன் ஹுவா Ong Boon Hua. (சீனம்:王文華). மலாயாவில் ஜப்பானியர்கள் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராகவும், பிரித்தானியர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டவர். அவருடைய சேவைகளைப் பாராட்டி அவருக்கு பிரித்தானிய அரசாங்கம் Order of the British Empire எனும் விருதை வழங்கிக் கௌரவத்தித்தது.
இருப்பினும், அவர் பின்னாட்களில் பிரித்தானியர்களுக்கு எதிராகவே மலாயா நாட்டைக் கைப்பற்ற முனைந்தார். பின்னர், இவர் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சியை உருவாக்கி அதன் தலைவர் ஆனார். பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டார். மலாயா அவசரகாலத்தின் போது பல கொரில்லா கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு பல இன்னலகளைக் கொடுத்தார்.
இவர் 2013 செப்டம்பர் 16 ஆம் திகதி தாய்லாந்து தலைநகரமான பாங்காக்க்கில் காலமானார். பாங்கோக் போஸ்ட் நாளிதழின் செய்திகள் படி, அன்றைய தினம் அதிகாலை மணி 6.20 மணியளவில் சின் பெங் வயது மூப்பு காரணமாகக் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு மலேசியா – தாய்லாந்து இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஹாட்யாய் ஒப்பந்தத்தின் படி, கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பலர் மலேசியாவிற்குத் திரும்பினர். ஆனால் சின் பெங்கை மட்டும் மலேசியாவிற்குள் நுழைய மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அதனால் அவர் தன்னுடைய வாழ்நாளில் பல வருடங்களைத் தாய்லாந்திலேயே கழித்தார்.