சிக்கரி
சிக்கரி என்பது ஒருவகைச் செடி ஆகும். இதன் தாவரப் பெயர் சிகோரியம் இண்டிபஸ் ஆகும். சிக்கரி செடியின் வேர் முள்ளங்கி போன்றிருக்கும்.
சிக்கரி செடி | |
---|---|
![]() | |
1885 illustration[1] | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Asterales |
குடும்பம்: | சூரியகாந்திக் குடும்பம் |
சிற்றினம்: | Cichorieae |
பேரினம்: | Cichorium |
இனம்: | சிக்கோரியம் இண்டிபஸ் |
இருசொற் பெயரீடு | |
Cichorium intybus L. | |
வேறு பெயர்கள் [2][3] | |
Synonymy
|
சிக்கரி செடியின் வேரைக் காயவைத்து, வறுத்துப் பொடியாக்குவதன் மூலம் பெறுவது சிக்கரித் தூள் ஆகும். காப்பி சுவையாக இருக்க, காப்பிக் கொட்டைத் தூளுடன், சிக்கரித் தூளை 80க்கு 20 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது.[4]
இந்தியாவில் சிக்கரி செடி பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசம், பீகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், அசாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
மருத்துவ குணங்கள்
சிக்கரி உடல் சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது. மூளையை சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. சிக்கரிக் கசாயம் மாதவிடாய் போக்கை சீர் செய்கிறது. ஈரல் நோய்களை குணமாக்கி, சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துவதுடன், வயிற்றுப்பூச்சிகளை அழிக்கிறது. சிக்கரி கால்நடைகளின் வயிற்றுப்பூச்சிகளை அகற்றுகிறது.[5]
மேற்கோள்கள்
- illustration from Prof. Dr. Otto Wilhelm Thomé Flora von Deutschland, Österreich und der Schweiz 1885, Gera, Germany
- "Cichorium intybus L. synonyms". Tropicos.org. Missouri Botanical Garden. பார்த்த நாள் 23 March 2014.
- "Cichorium intybus L.". The Plant List (2013). பார்த்த நாள் 23 March 2014.
- http://www.webmd.com/vitamins-supplements/ingredientmono-92-chicory.aspx?activeingredientid=92&activeingredientname=chicory
- http://www.pmkchicory.com/what_is_chicory.html
வெளி இணைப்புகள்
- Dogfish Head's Chicory Stout
- History of Belgian Endive
- Species of chicory and endive
- Edibility of Chicory: Edible parts and identification of wild Chicory.
- Chicory, from Nature Manitoba