சி. எல். ஆனந்தன்

சி. எல். ஆனந்தன் (இறப்பு: மார்ச் 25, 1989) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் 1960 ஆம் ஆண்டில் விஜயபுரி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகளில் இவர் சிறந்து விளங்கினார்.[1]

சி. எல். ஆனந்தன்
C. L. Anandan
இறப்பு25 மார்ச்சு 1989(1989-03-25)
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1960கள்
பிள்ளைகள்டிஸ்கோ சாந்தி, லலிதா குமாரி, ஜெய்ராம்

நடிப்புத் துறையில்

1960ல் சிட்டாடல் பிலிம்சின் விஜயபுரி வீரன் படத்தில் ஜோசப் தளியத் இயக்கத்தில் ஆனந்தன் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ஹேமலதா இப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். குதிரைச் சவாரி, கத்திச் சண்டைகளில் இவர் நடித்தார். இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. காட்டு மல்லிகை என்ற படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் அவரே நடித்தார். 1962 ஆம் ஆண்டில் வீரத்திருமகன் படத்தில் குமாரி சச்சுவுடன் இணைந்து நடித்தார்.[1]

கொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன், நீயா நானா, நானும் மனிதன் தான், காட்டு மல்லிகை, அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகியவை ஆனந்தனின் குறிப்பிடத்தக்க படங்கள்.

பிற்காலத்தில், எம். ஜி. ஆருடன் இணைந்து தனிப்பிறவி, நீரும் நெருப்பும் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஆனந்தனின் பட வாய்ப்புகள் குறைந்தன.

தயாரிப்பாளராக

நண்பர்களுடன் சேர்ந்து ஆனந்தன் மூவிஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நானும் மனிதன் தான் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் பெரு வெற்றி பெறவில்லை.[2]

மறைவு

ஆனந்தன் 1989 மார்ச் 25 இல் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு தனது 56வது அகவையில் காலமானார்.[3] ஆனந்தனின் மனைவி பெயர் லட்சுமி அம்மாள். 3 மகன்கள். 4 மகள்கள். பிற்காலத்தில் நடன நடிகையாக விளங்கிய டிஸ்கோ சாந்தி அவரது மகள்களில் ஒருவர். இன்னொரு மகள் லலிதா குமாரி பிரகாஷ் ராஜை திருமணம் செய்தார்.[3] லலிதாகுமாரியும் மகன் ஜெய்ராமும் திரைப்படங்களில் நடித்தனர்[1]

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. "நினைவுகளில் ரீங்காரமிடும் ரோஜா மலரே ராஜகுமாரி" (24 சூலை 2011). மூல முகவரியிலிருந்து 19 மார்ச் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 சூலை 2016.
  2. "Imprints On Indian Film Screen". பார்த்த நாள் 3 சூலை 2016.
  3. "Potpourri of titbits about Tamil cinema, C. L. Anandan". பார்த்த நாள் 3 சூலை 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.