சாம்பவி ஆறு
சாம்பவி (Shambhavi), சாம்பு என்பதன் பெண்பால் பெயராகும். சமஸ்கிருதத்தில் சாம்பு என்பதன் பொருள் "உதவிகரமான, அன்பான, கருணையுள்ள" என்பதாகும். சாம்பு என்பது சிவபெருமானின் பெயராகும். சாம்பவி என்பது சிவனின் துணைவியாரின் பெயராகும். சாம்பவி என்பது பெண் தெய்வம் துர்க்கையின் பெயரும் ஆகும்.
இந்த ஆறு இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் தெற்கு கன்னடம் மாவட்டத்தில் பாய்கின்ற ஆறாகும். இந்த ஆற்றின் தெற்குப் பகுதியில் முல்கி நகரம் அமைந்துள்ளது. இந்த ஆறானது மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. பாப்பநாடு துர்க்கை அம்மன் ஆலயம் இந்த ஆற்றின் அருகில் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
- "Sri Kshethra Bappanadu". www.ourkarnataka.com. பார்த்த நாள் 2010-01-26.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.