சான் இல்டிபொன்சோ முதலாம் உடன்பாடு

சான் இல்டிபொன்சோ முதலாம் உடன்பாடு (First Treaty of San Ildefonso) என்பது அக்டோபர் 1, 1777 அன்று எசுப்பானியப் பேரரசுக்கும் போர்த்துக்கேயப் பேரரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை ஆகும். போர்த்துக்கலின் அரசியாக முதலாம் மேரி முடிசூட்டிய சில காலத்திற்குள்ளாக இந்த உடன்பாடு காணப்பட்டது.[1]

இதன்படி ரியோ டி லா பிளாட்டா பகுதியில் ஆட்சிப்பகுதிகளுக்கான பிணக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. உடன்பாட்டின்படி எசுப்பானியா பிரேசில் பகுதிகளைப் போர்த்துகலிற்கு (அதாவது அமேசான் படுகை) திருப்பிக் கொடுத்தது; இதற்கு எதிராக பன்டா ஓரியன்டல் (அதாவது உருகுவை)யில் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிக் கொண்டது. இந்த உடன்பாடு கூடுதலாக 1750இல் மாத்ரித்தில் கண்ட உடன்பாட்டையும் உறுதி செய்து எசுப்பானியா மிசியோன் ஓரியன்டேல்சையும் கொலோனியா டெல் சாக்ரமெந்தோவையும் தக்க வைத்துக் கொள்ள வகை செய்தது.

மேற்சான்றுகள்

  1. España en Europa: Estudios de historia comparada: escritos seleccionados, ஜான் யுக்சுடபிள் எலியட், வலென்சியாப் பல்கலைக்கழகம் (2002) (எசுப்பானிய மொழி)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.