சாந்திநிகேதன்

சாந்திநிகேதன் (Santiniketan) (வங்காள: শান্তিনিকেতন) இந்தியாவின் , மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இரவீந்திரநாத் தாகூர் 1862ஆம் ஆண்டில் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக் கழக நகரை நிறுவினார்.[1] சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 1952ஆம் ஆண்டு முதல் இந்திய நடுவண் அரசின் கீழ் மத்தியப் பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.

சாந்திநிகேதன்

சாந்திநிகேதன்
শান্তিনিকেতন
நகரம்
சாந்திநிகேதனில் அறுவடைத் திருவிழா (தை மாதம்)
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்பிர்பூம் மாவட்டம்
நிர்மாணித்தவர்இரவீந்திரநாத் தாகூர்
மொழிகள்
  அலுவல் மொழிகள்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்731235
வாகனப் பதிவுWB-53
இணையதளம்visva-bharati.ac.in

பெயர்க் காராணம்

சாந்தி என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அமைதி என்றும், நிகேதன் என்ற சொல்லிற்கு வீடு எனப் பொருள்படும். இரண்டு சொற்களை இணைத்து சாந்திநிகேதன் எனப் பெயரிடப்பட்டது.

இங்கு படித்தவர்களில் சிலர்

ஆண்டு விழாக்கள்

  • இரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் விழா, ஏப்ரல் மாதம்
  • மரம் நடும் விழா, ஆகஸ்டு 22 மற்றும் 23
  • வருசா மங்கள மழைத் திருவிழா விழா, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்கள்
  • நடனம், இசை, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தொல்பொருள் தொடர்பான விழாக்கள், டிசம்பர் மற்றும் சனவரி மாதங்கள்
  • மகோட்சவ் மேளா, ஜோய்டேவ் மேளா மற்றும் வசந்த உற்சவ விழாக்கள்.

மேற்கோள்கள்

  1. Pearson, WW.: Santiniketan Bolpur School of Rabindranath Tagore, illustrations by Mukul Dey, The Macmillan Company, 1916

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.