சவிகல்ப சமாதி

சவிகல்ப சமாதி (சமசுகிருதம்: सविकल्पसमाधि)என்பது, அறிபவன், அறிவு என்னும் வேறுபாடுகள் மறையாமலே, இரண்டற்ற பிரம்மத்தின் வடிவை அடைந்த மனதின் ஒருமைபாடு சமாதி நிலையே சவிகல்ப சமாதி என்பார் பதஞ்சலி முனிவர்.

விகல்பம் எனில் பகுத்துக் காணும் கற்பனையாகும். சவிகல்ப சமாதியில், சித்தமானது (அறிவானது) அறிபவனான தன்னுடைய மற்றும் அறிவினுடைய எண்ணங்களுடனயே இரண்டற்ற பிரம்ம வஸ்துவின் மீது நிலைத்து நிற்கும். பிரம்ம வஸ்துதான் முதன்மையானதாகும். அறிந்து கொள்ளும் அறிவானது குறைந்து இருக்கும். அதனால் தற்காலிகமாக அந்த இரண்டும் மறக்கப்பட்டதைப் போல இருக்கும். ஆனால் உண்மையிலேயே ஒடுங்கி இருப்பதில்லை. இந்த சவிகல்ப சமாதியை சம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைப்பதுண்டு.

சவிகல்ப சமாதி நிலையில் களிமண்ணினால் செய்யப்பட்ட யாணை போன்றவை (பொம்மை யாணை) தோண்றிக் கொண்டிருந்தாலும், அத்துடன் களிமண்ணும் தோண்றிக் கொண்டிருப்பதைப் போல, பன்மையான இவ்வுலகமானது (துவைத பிரபஞ்சம்) தோண்றிக் கொண்டிருந்தாலும் இரண்டற்ற அத்வைத பிரம்ம வஸ்துவும் உணரப்படுகிறது.

களிமண்ணினால் செய்யப்பட்டுள்ள யாணையைக் காணும்பொழுது, அறிவுடைய எவருமே அதையே உண்மையான யாணை என்று எண்ண மாட்டார்கள். யாணை என்னும் பெயர் மற்றும் யாணை என்னும் விலங்கின் உருவமானது அதற்கு இருந்தாலும், இந்தப் பெயரும், உருவமும் வெறும் பேச்சளவு மட்டுமே ஆகும். அது உண்மையிலேயே களிமண் என்பதை உணர்ந்து கொள்ள இயலுகிறது. அதைப் போன்றே, பெயரையும், வடிவத்தையும், பெற்றுள்ள உலகமாக இருப்பினும், அறிபவன், அறிவு, அறியப்பட்ட வஸ்து (பிரம்மம்) என்னும் மூன்றும் கானப்பட்டாலும், அத்துடனேயே பிரம்ம வஸ்துவின் அனுபவமும் (பிரம்மானுபவம்) கூட சவிகல்ப சமாதியில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

உசாத் துணை

  • பதஞ்சலி யோசூத்திரம்
  • வேதாந்த சாரம், நூலாசிரியர், சதானந்த யோகீசுவரர்

வெளி இணைப்புகள்

  • பதஞ்சலி யோக சூத்திரத்தை தமிழில் கேட்க, பதிவிறக்க

இதனையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.