சலீமா

சலீமா என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌. இவர் ஆரண்யகம் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். வந்தனம் திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.

சலீமா
பிறப்புகாலீஸ்வரிதேவி
நவம்பர் 4, 1973 (1973-11-04)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்கலை என்கிற கலையரசி
பணிநடிகர், நடனம், தொழில் முனைவு, தொழிலதிபர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1975 (குழந்தை நட்சத்திரம்)
1982–1989
பெற்றோர்சலீம், கிரிஜா

சலீமா 1986 இல் வெளியான மலையாளத் திரைப்படமான நாகக்‌ஷாதங்கள் படத்தில் அறிமுகமானார். இவர் தெலுங்கு திரைப்பட உலகில் பிரபலமான கிரிஜா என்பவரின் மகள்.

மலையாளத் திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களிலும் சலீமா நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள், நிறுவன விளம்பரங்கள் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு பிறகு 2017 இல் மீண்டும் மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.