சலபாசனம்

சலபாசனம் என்பது யோகக் கலையின் ஆசனங்களில் ஒன்று. ’சலபம்’ என்றால் வெட்டுக்கிளியைக் குறிக்கும். இந்த ஆசன நிலை வெட்டுக்கிளியின் தோற்றத்தை ஒத்திருப்பதால் சலபாசனம் என அழைக்கப்படுகிறது.

செய்முறை

இவ்வாசனத்தை இரு விதங்களில் செய்யலாம்.

முறை 1

குப்புறப்படுத்துக்கொண்டு கைகளை உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது முகவாய்க்கட்டை விரிப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்படி வைத்துக்கொண்டு, உள்ளங்கைகளை ஆகாயத்தை நோக்கிப் பார்த்த வண்ணம் வைத்துக்  கொள்ள வேண்டும்.
கால்கள் இரண்டும் ஒட்டியே நீட்டி வைத்துக்கொண்டிருக்க, முழங்கால்களை நன்கு விறைப்பாக நீட்டிய வண்ணம், கணுக்கால், கட்டைவிரல் ஆகியவற்றை நீட்டி தொப்புளுக்கு மேலாகக்கால்களை உயரே தூக்க வேண்டும்.
சாதாரண சுவாசத்தில் எழுப்பிப் பழகி விட்டுப் பின்னர் கால்களை மேலே தூக்குகையில் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கால்களை வெளியே விடுகையில் மூச்சை வெளிவிட வேண்டும்.
கைகளும், முகமும் தரையில் அழுந்தி இருக்க வேண்டும்.

முறை 2

குப்புறப் படுத்த வண்ணம் கால்களை நீட்டிக் கைகளை உடலோடு ஒட்டி வைக்க வேண்டும்.
இப்போது ஒரு காலை மட்டும் மேலே தூக்கிக் கொண்டு, மற்றொரு காலை எல் போல் மடித்து நீட்டிய காலின் முழங்கால் பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இம்முறையில் குறைந்தது இருபது விநாடிகளாவது இருக்க வேண்டும்.
பின்னர் கால் மாற்றிச் செய்ய வேண்டும்.

பலன்கள்

இதன் மூலம் வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகள் சுருங்கி இறுக ஆரம்பிக்கும். உண்ணும் உணவு செரிமானமாக இந்த ஆசனம் உதவும். சிறுநீரகங்கள், கல்லீரல் அனைத்துக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். வாயு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு நிவாரணம் ஏற்படும். வயிறு பெரியதாக இருக்கும் பெண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் வயிறு சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். பொதுவான வயிற்றுத் தொந்திரவுகள் குறையும்.

செய்யக்கூடாதோர்

ஆபரேஷன் செய்து கொண்டவர்களோ, மாரடைப்பு, இருதநோய் உள்ள்ள்வர்கள், கர்ப்பிணிகள் இவ்வாசனத்தைச் செய்யக் கூடாது.

பட இணைப்புகள்

படம் - https://www.flickr.com/photos/speakingoffaith/6991674088/sizes/m

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.