சர்மிஷ்டை
சர்மிஷ்டை (Sharmistha), அசுர குல அரசன் விருசபர்வாவின் மகள். இவளது நெருங்கிய தோழி, அசுர குலகுரு சுக்கிராச்சாரியின் மகள் தேவயானி. சந்திர குல மன்னர் யயாதியின் மனைவி. சர்மிஷ்டையின் மகன் புருவின் பௌரவர் குலத்தில் பிறந்தவர்களே பீஷ்மர், பாண்டவர் மற்றும் கௌரவர்.[1].[2]

புராண வரலாறு
ஒரு முறை குளத்தில் நீராடிவிட்டு திரும்புகையில் கவனக்குறைவாக அரச குமாரி சர்மிஷ்டையின் ஆடையை தேவயானி அணிந்தமைக்கு, அவளை உடலாலும் மனதாலும் துன்புறுத்தினாள் ஷர்மிஷ்டை. அதற்கு பழி வாங்க முடிவு செய்தால் தேவயானி.
சந்திர குல மன்னன் யயாதியை திருமணம் செய்து கொண்ட போது தேவயானி, சர்மிஷ்டையை தனது பணிப்பெண்ணாகப் பணிபுரிய தனது தந்தை சுக்கிராச்சாரியையும், அசுர குல மன்னன் விருபசேனனையும் வேண்ட, அவர்களும் சம்மதித்தனர். ஷர்மிஷ்டை மற்றும் தேவயானி யயாதியுடன் சென்றனர்.
தேவயானியின் மூலம் யயாதிக்கு நான்கு ஆண் மக்கள் பிறந்தனர். இந்நிலையில் தேவயானிக்கு தெரியாமல் சர்மிஷ்டை மீது காதல் கொண்ட யயாதி, சர்மிஷ்டை மூலம் துரு, அனு, புரு எனும் மூன்று ஆண் மக்கள் பிறந்தது.
ஒரு முறை ஷர்மிஷ்டையின் அரண்மனைக்கு சென்ற தேவயானி, அங்கு யயாதியின் உருவம் ஒத்த மூன்று குழந்தைகளை கண்டு, உங்கள் தந்தை யார் என வினவ, அவர்களும் யயாதி என உரைத்தது கண்டு, சர்மிஷ்டை மற்றும் யயாதி மீது கோபமுற்று, நடந்ததை விசயத்தை தந்தை சுக்கிராச்சாரியாரிடம் உரைத்தாள். சுக்கிராச்சாரியும், தன் மகளுக்கு துரோகம் செய்த, யயாதியை உடனே கிழவனாக மாற சாபமிட்டார். பின்னர் வருத்தமுற்ற தேவயானி, சாபவிமேசனத்திற்கு வழி கேட்க, அவரும், யயாதியின் முதுமைப் பருவத்தை மகன்களில் ஒருவர் ஏற்றால், யயாதியின் முதுமை நீங்கி இளமை அடைவான் என்று கூற, யயாதியின் முதுமையைத் தேவயானியின் நான்கு மகன்களில் ஒருவர் கூட ஏற்காத நிலையில், ஷர்மிஷ்டையின் மகன்களில் புரு என்பவன், யயாதியின் முதுமை ஏற்று தன் இளமையை வழங்கினான்.
இதனால் மகிழ்ந்த யயாதி, தனக்குப் பிறகு சர்மிஷ்டைக்கு பிறந்த இளவரசன் புரு, தன்நாட்டை ஆள வரமளித்தான்.[3].[4]
மேற்கோள்கள்
- http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
- http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0426.pdf பம்மல் சம்பந்த முதலியாரின் யயாதி நாடகம் (கோப்பு வடிவில்)
- http://kasturis.lazyreader.com/content/chapter-22-yayati-and-puru
- http://theglobaljournals.com/gra/file.php?val=March_2013_1363599949_05d91_64.pdf
வெளி இணைப்புகள்
- தமிழில் முழு பாரதம்
- யயாதி
- பம்மல் சம்பந்த முதலியாரின் யயாதி நாடகம் (கோப்பு வடிவில்)
- Devayani and Yayati Retold by P. R. Ramachander]
- Yayati in Brahma Purana