சரக் கோட்பாடு

இழைக்கொள்கை (சரக் கோட்பாடு) என்பது இயற்பியலில் அடிப்படைத் துகள்களாகக் கருதப்படும் குவார்க்கு, எதிர்மின்னி போன்றவற்றுக்கும் புவியீர்ப்புப் போன்ற பொருளீர்ப்பு விசைக்கு அடிப்படையாகக் கருதும் ஈர்ப்பியான் (கிராவிட்டான், graviton) ஆகியவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத இழைபோன்ற அலைவுறும் ஒன்று என்று கருதபப்டுகின்றது. அணுவின் உள்ளே உள்ள பொருள்களையும் ஈர்ப்புவிசையையும் இணைக்கும் முகமாக, அல்லது அப்படி இணைத்துப் பார்க்ககூடிய வாய்ப்புக்கூறுகள் கொண்டதாக இந்த இழைக்கொள்கை இருப்பதால் இதனை எல்லாவற்றுக்குமான கொள்கை (theory of everything, TOE) என்னும் மிகப்பெரிய ஒன்றிணைப்புக் கொள்கைக்கு வழிகோலியாகக் கருதப்படுகின்றது. முதலானவற்றுக்கு அணுக்களுக்கு உள்ளே உள்ள அணுக்கருவுக்கு உள்ளேயுள்ள அடிப்படைத்துகளு அடிப்படையாக இருக்ககூடிய குவார்க்கு எதிர்மின்னிString


1.பொருள்
2. அணுக்கள்
3. அணுக்குள் உள்ள துகள்கள் (நேர்மின்னி, நொதுமி, எதிர்மின்னி)
4. குவார்க்கு
5. இழைகள்

இந்த இழைக்கொள்கையின்படி அணுவுக்குள் இருக்கும் குவார்க்கு, எதிர்மின்னி முதலானவை 0-திரட்சி (0-பரிமாணம்) கொண்ட பொருள்கள் அல்ல; அவை நூலிழை போன்ற மிக நுண்ணிய அலையக்கூடிய "பொருள்களால்" ஆனவை ஆகும். போசான் இழைக்கொள்கை என்பது போசான் புள்ளியியல் தன்மை கொண்ட பொருள்களுக்கும் மட்டுமானது, ஆனால் இதன் விரிவான மீயிழைக் கொள்கை (superstring theory) என்பது எதிர்மின்னிகள் போன்ற வெர்மியான்களையும் இணைக்க உதவியது. இழைக்கொள்கையின் பயன்பாட்டுக்கு இப்பொழுது அறியப்படும் இடங்காலவெளியையும் (spacetime) தாண்டி மிகுநுண் வெளித்திரட்சிகள் தேவைப்படுகின்றன. இக் கொள்கை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. கருத்தளவில் இழைக்கொள்கையின் அமைப்பை வலப்புறம் உள்ள படம் விளக்குகின்றது

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.