சம இரவு நாள்

சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும்.

UTC நாள் மற்றும் நேரம் கதிர்த்திருப்பங்கள் மற்றும் சம இரவு நாட்கள்[1]
ஆண்டுசம இரவு நாள்
மார்
கதிர்த்திருப்பம்
சூன்
சம இரவு நாள்
செப்
கதிர்த்திருப்பம்
திசம்
நாள்நேரம்நாள்நேரம்நாள்நேரம்நாள்நேரம்
2004 2006:492100:572216:302112:42
2005 2012:332106:462222:232118:35
2006 2018:262112:262304:032200:22
2007 2100:072118:062309:512206:08
2008 2005:482023:592215:442112:04
2009 2011:442105:452221:182117:47
2010 2017:322111:282303:092123:38
2011 2023:212117:162309:042205:30
2012 2005:142023:092214:492111:11
2013 2011:022105:042220:442117:11
2014 2016:572110:512302:292123:03
2015 2022:452116:382308:202204:48
2016 2004:302022:342214:212110:44
2017 2010:282104:242220:022116:28
சம இரவு நாளன்று எவ்வாறு சூரியனின் கதிர்கள் புவியில் விழுகின்றன

சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.

நிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைகோள்கள்,இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தை சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களை பயன்படுத்தும்;பயனர் தகவல்களை சுமக்காது.

புவியின் வடக்குப்பகுதியில் இவை இளவேனில் மற்றும் இளங்கூதிர் காலங்கள் துவங்கும் நாட்களாக அறியப்படுகின்றன.

பொதுமக்களும் இந்நாட்களை எளிதாக அறிய முடிவதால்,பல பண்பாடுகளில் இந்நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

குறிப்பு: குளிர் காரணங்களால் மரத்தின் இலைகள் உதிர்ந்து பின் மீண்டும் முளைக்கும்

குறிப்பு

  1. United States Naval Observatory (01/28/07). "Earth's Seasons: Equinoxes, Solstices, Perihelion, and Aphelion, 2000-2020". http://aa.usno.navy.mil/data/docs/EarthSeasons.php.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.