சப்போட்டா
சப்போட்டா (Manilkara zapota பொதுவாக sapodilla) சுவையான பழம் தரும் தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், மற்றும் மெக்சிக்கோவில் மிகுதியாக விளையக்கூடியது. தெற்கு மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளுக்கு உரித்தான இவ்வகைப் பழங்கள்[1] எசுப்பானியக் குடியேற்றத்தின் போது பிலிப்பீன்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சப்போட்டா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Ericales |
குடும்பம்: | Sapotaceae |
பேரினம்: | Manilkara |
இனம்: | M. zapota |
இருசொற் பெயரீடு | |
Manilkara zapota (லின்.) பி.ரோயென் | |
வேறு பெயர்கள் | |
Achradelpha mammosa ஓ. எஃப். குக் |
குண்டுசப்போட்டா, வால்சப்போட்டா என இதில் வகைகள் உண்டு. பால்-சப்போட்டா தின்னும்போது உதடுகளில் பால் ஒட்டிக்கொள்ளும். கர்நாடகச் சப்போட்டாவில் இனிப்பு மிகுதி. பொதுவாகச் சப்போட்டாப் பழம் உடலுக்கு நல்லது. எனிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை அதிக அளவு உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.[2] இந்த பழம் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது. [3]
படங்கள்
- சப்போட்டாப் பழம்
- சப்போட்டாப் பழ உள்ளிருப்பு
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- "Manilkara zapota (L.) P. Royen". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (1995-11-16). பார்த்த நாள் 2010-04-30.
- காரணம் இப் பழத்தின் 100 கிராம் எடையில் 19.9 கிராம் சர்க்கரைமாவுச்சத்து உள்ளது.
- http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3812&cat=500