சன்யாசிப்புடவுக் கல்வெட்டு

சன்யாசிப் புடவுக் கல்வெட்டு என்பது குற்றால மலையிலுள்ள தேனருவி பக்கத்தில் சன்யாசிப் புடவு என்னும் இயற்கைக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட 2500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு. இதில் காணப்படும் எழுத்துக்கள் சில மூலப் பிராமி எழுத்துக்கள் போல் இருந்தாலும் இதைக் கல்வெட்டு ஆய்வாளர்களால் முழுவதுமாகப் படிக்க இயலவில்லை.

சன்யாசிப்படவுக் கல்வெட்டு மாதிரி - குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம்

இதிலுள்ள எழுத்துக்களில் சில கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது போல் தெரிந்தாலும் மற்றவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள எழுத்துக்களுடன் பொருந்தாததால் இதை அக்கல்வெட்டுகளுக்கு முந்தியவையாகவே கொண்டுள்ளனர். இதன் மாதிரி குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

அரப்பன் நாகரிகத்தின் மூலக்கல்வெட்டு

இதை முதலில் 1911ஆம் ஆண்டில் பிரித்தானிய நடுவணரசு படி எடுத்தது. அப்போது இருந்த வசதிக்கு அதை படிக்க முடியாத எழுத்துக்கள் என அறிவித்தனர்.[1] ஆனால் இவ்வெழுத்துக்களை அரப்பன் கால உருவ எழுத்துக்கள் நிலையான எழுத்துக்களாக வளர்ச்சி பெற்ற காலத்துக்கு முன் வழக்கிலிருந்த எழுத்துக்களாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.[2]

இதனையும் காண்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. Annual Report of Epigraphy. Part 2. 1912. பக். 50. doi:12 நவம்பர், 2012.
  2. குற்றால மலையில் புரியாத எழுத்துக் கல்வெட்டு (டிசம்பர் 2006). தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம். சென்னை: மெய்யப்பன் பதிப்பகம். பக். பப - 20 - 21.

மூலம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.