மூலப் பிராமி

மூலப் பிராமி (Rudiment Tamil Brahmi Script) என்பது தமிழ் பிராமி போன்ற பிராமி எழுத்துக்களின் தாய் என ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் எழுத்து முறையாகும். வளர்ச்சியடைந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு.300 முதல் தமிழகத்தில் காணப்படுகின்றன. இவற்றை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த தெளிவான தமிழ் பிராமி எழுத்துக்களுக்கு முன் தெளிவற்ற எழுத்துக்கள் இருந்திருக்கும் என நம்பி வந்தனர்.

ஆதிச்சநல்லூர் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட மூலப் பிராமி எழுத்துக்கள் பொறித்த பொருட்கள்

ஆதிச்சநல்லூர்

இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்கள் பொறித்த பொருட்கள் குறைந்தது கி.மு. 500 முதல் அதிகபட்சம் கி.மு. 1500வரை பழமை வாய்ந்தது என சி-14 முறையால் அறியப்பட்டன. இதை சிவசுப்பிரமணியன் போன்ற ஆய்வாளர்கள் மூலப் பிராமி என சந்தேகிக்கின்றனர். இது தமிழ் பிராமி போன்ற பிராமி எழுத்துக்களின் தாய் என ஆராய்ச்சியாளர்களால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் தமிழ் எழுத்துகளின் தோற்றம் கி.மு. 1500 வரை கூட செல்லக்கூடும்.[1]

எதிர்ப்பு

இது இப்படி இருக்க இவை எழுத்தே அல்ல வெறும் சாம்பல் தான் கூறும் ஆராய்ச்சியாளரும் உள்ளனர்.[2]

மூலம்

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  2. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4902:2010-03-19-12-18-09&catid=996:10&Itemid=253
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.