சந்திரா (திரைப்படம்)
சந்திரா இது 2014ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கற்பனை சரித்திரப்படம் ஆகும். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் நடிகர், இயக்குனர், மாடல், சமூகநலவாதி என பன்முகங்களை கொண்ட ரூபா அய்யர். கற்பனை காதல் கதையாக எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சிரேயா சரன் மற்றும் கதாநாயகனாக பிரேம் குமார் நடித்துள்ளார்கள். ஒரு முக்கிய கதாபத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் விவேக் நடிக்கின்றார்கள். இத்திரைப்படம் 27 சூன் 2013 அன்று கன்னடம் மொழியிலும் 14 பெப்ரவரி 2014 அன்று தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
சந்திரா | |
---|---|
![]() | |
இயக்கம் | ரூபா ஐயர் |
தயாரிப்பு | இந்தியா கிளாசிக் ஆர்ட்ஸ் மற்றும் நரசிம்ம ஆர்ட்ஸ் |
திரைக்கதை | ரூபா ஐயர் |
இசை | கவுதம் ஸ்ரீவத்சம் |
நடிப்பு | சிரேயா சரன் பிரேம் குமார் கணேஷ் வெங்கட்ராமன் |
ஒளிப்பதிவு | பி.எச்.கே தாஸ் |
விநியோகம் | நரசிம்ம ஆர்ட்ஸ் |
வெளியீடு | 14 பெப்ரவரி 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் கன்னடம் |
கதைச்சுருக்கம்
இந்த திரைப்படம் ஒரு இளவரசியின் கடந்த தலைமுறை காதல் வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்
- சிரேயா சரன் - மகாராணி அம்மன்மணி சந்திரவதி
- பிரேம் குமார் - சந்திரஹாசா
- கணேஷ் வெங்கட்ராமன்
- விவேக்
- கிரிஷ் கர்னாட்
- சுகன்யா
- ஸ்ரீநாத்
- சுமித்ரா
- ரம்யா கிருஷ்ணன் - சிறப்பு தோற்றம்
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் - சிறப்பு தோற்றம்
- யாஷ் - சிறப்பு தோற்றம்
வெளியீடு
இந்த திரைப்படம் கன்னட மொழியில் ஜூன் 27.2013ம் ஆண்டு வெளியிடப்பட்டு நல்ல விமர்சனங்கள் மற்றும் வணிக வெற்றியும் அடைந்தது. அதே நேரத்தில் அதிக வசூல் செய்த கன்னட படங்களில் ஒன்றானது.