சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா, இந்திய மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.[2] இவர் தூத்துக்குடி மாநகராட்சி மன்றத் தலைவராக 2011 முதல் 2014 வரை இருந்துள்ளார்.

சசிகலா புஷ்பா
இந்திய மாநிலங்களவை உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 22 மே 1976 (1976-05-22)
தூத்துக்குடி
வாழ்க்கை துணைவர்(கள்) லிங்கேசுவரா திலகன் (2018ல் மணமுறிவு)[1]

ராமசாமி (2018-தற்போது வரை)

திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா என்பவரை அடித்ததற்காக அஇஅதிமுகவில் இருந்து ஆகத்து 1,2016 அன்று நீக்கப்பட்டார். இவரை செயலலிதா அடித்ததாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் மாநிலங்களவையில் முறையிட்டார்.[3][4] சசிகலா மற்றும் டி.டி.வி தினகரனைக் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் ஆர்.கே.நகரில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்ற பிறகு அவரைச் சந்தித்துத் தம் ஆதரவைத் தெரிவித்தார்.[5]

மறுமணம்

இவரது முன்னால் கணவரான லிங்கேசுவரா திலகனிடம் சட்ட ரீதியாக 2018ஆம் ஆண்டு மணமுறிவுப் பெற்றுக்கொண்டார். பின்பு ராமசாமி என்பவரை திருமணம் செய்யப்போவதாக ஊடக வாயிலாகத் தகவல்கள் பரவியது. இதற்கு எதிராக ராமசாமியின் மனைவியான சத்யபிரியா என்பவர் மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனக்கும் ராமசாமிக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, அவருக்கும் எனக்கும் 2016ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர், என்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். தற்போது, எனக்குத் தெரியாமல் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவுள்ளார், அதைத் தடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராமசாமி மறுமணம் செய்ய விரும்பினால் சட்ட ரீதியாக அவரது மனைவியான சத்யாபிரியாவை மணமுறிவுப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்யலாம் என்றும் இந்த திருமணத்திற்கு தடைவிதித்தது. எனினும் நீதிமன்ற தடையைமீறி மார்ச்சு 26, 2018ஆம் ஆண்டு சசிகலா புஷ்பா-ராமசாமிக்கும் தில்லியில் திருமணம் நடைபெற்றது.[6]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.