சசசுத்திர சீமா பல்

சசஸ்த்திர சீமை பலம் அல்லது எஸ்.எஸ்.பி. (Sashastra Seema Bal) என்பது இந்திய-நேப்பாளம் மற்றும் இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் (263.கி.மீ), உத்திரப் பிரதேசம் (599.3 கி.மீ), பீகார் (800.4 கி.மீ), மேற்கு வங்காளம் (105.6 கி.மீ) மற்றும் சிக்கிம் (32 கி.மீ) ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய - நேப்பாள எல்லைகளான 1751 கி.மீ தூரத்தை பாதுகாக்கிறது. சிக்கிம் (32 கி.மீ), மேற்கு வங்காளம் (183 கி.மீ), அசாம் (267 கி.மீ) மற்றும் அருணாச்சல் பிரதேசம் (217 கி.மீ) ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியையும் பாதுகாக்கிறது.[1]

வரலாறு

இந்திய சீன சச்சரவுகளுக்குப்பின் எல்லைப்பாதுகாப்பின் தேவையுணர்ந்து வடக்கு அசாம், வடக்கு மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேச மலைகள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய எல்லைப்பகுதிகளைப் பாதுகாக்க 1963ல் உருவாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக மணிப்பூர், திருபுரா, ஜம்மு(1965), மேகாலையா(1975), சிக்கிம்(1976), இராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லைப்பகுதிகள்(1989), தெற்கு மேற்கு வங்காளம், நாகாலாந்து(1989) மற்றும் இதர ஜம்மு காஷ்மீர் மாவட்டங்கள் என இதன் பாதுகாப்புப் பணி விரிவு படுத்தப்பட்டன. பாதுகாப்புச் மறுசீரமைப்பிற்குப் பிறகு 2001 ஜனவரி முதல் இந்திய-நேப்பாள எல்லையும், 2004 மார்ச்சு இந்திய-பூட்டான் எல்லையும் இதன் பிரதான பாதுகாப்புப் பகுதிகளாக மாற்றப்பட்டன.

பணிகள்

  • எல்லைப்பகுதி வாழ் மக்களுக்கு பாதுகாப்புணர்வு அளித்தல்
  • எல்லை ஊடுருவல் மற்றும் அனுமதியற்ற இந்திய எல்லைப் பகுதி போக்குவரத்தைத் தடுத்தல்
  • கடத்தல் மற்றும் இதர சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல்

மேற்கோள்கள்

  1. http://www.ssb.nic.in/index.asp?linkid=59&sublinkid=32 எஸ்.எஸ்.பி.யின் வரலாறு]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.