சங்குவேலி சிவஞான பிள்ளையார் ஆலயம்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள சங்குவேலி கிராமத்தில் உடுவில் - மானிப்பாய் வீதியில் அமைந்துள்ளது.ஈழத்து ஆலயங்கள் [1]
சங்குவேலி சிவஞானப் பிள்ளையார் ஆலயம்

சங்குவேலி கிராம மக்கள் ஆதியிலுள்ள விநாயகர் ஆலயத்தை வழிபட்டு வந்துள்ளனர். இவ்வாலயம் சுண்ணாம்பும் காட்டுக்கல்லும் கொண்டு கருவறை மட்டும் கொண்ட ஏகதள விமானத்தைக் கொண்ட ஆலயமாகக் காணப்பட்டது எனக் கூறப்படுகின்றது. இவ்வாலயத்தை கட்டியவர் யாரென்பது அறியப்படவில்லை எனினும் இக்கோயில் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளில் ஒருவரான செகராசசேகர மன்னனால் கட்டுவிக்கப்பட்டது என்பது கர்ணபரம்பரைக்கதையாக உள்ளது. இவ்வாதி விநாயகர் ஆலயமானது இன்றைக்கு 300ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக காணப்படுகின்றது.
இவ்வாலயம் திருமஞ்சனக்கிணற்றுடன் அமைந்து காணப்படுகிறது. இதன் மூல விநாயகர் ஒரு அடி ஆறு அங்குலம் கொண்ட அழகிய தோற்றத்துடன் காணப்படுகின்றது.
இவ்வாலயத்தை பராமரித்து வந்தவர்கள் காசி உடையார் குடும்பம் என்று கூறப்படுகின்றது. ஒன்பது பாய்மரக் கப்பல்களை சொந்தமாக வைத்து வாணிபம் செய்தவரும், தனவந்தரும் பிரபலவர்த்தகருமான மட்டக்களப்பு திரு. காசிநாதர் வைத்தியலிங்கம்பிள்ளை அவர்களால் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.
ஆலயத்தின் அமைவிடம்
வெளிக்சுற்றின் கிழக்கு வெளிப்புறத்தில் கோயிலின் ஈசான தெற்கில் தேர்த்தரிப்பிடமும் மண்டபமும் படிகளும் சீமெந்தினால் அழகாக அமைக்கப்பட்டுள்ளன கோயில் தெற்கு வீதியின் வெளிப்புறமாக அன்னதான மண்டபமாகிய ”அன்னபுரணி” மண்டபம் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது வீதியின் தெற்குப்பக்கமாக சிந்துநதித் தீர்த்தம் ஒருபக்கப்படிவுடன் வடக்குப்பக்கமாக 15படிகள் கொண்டதாக சற்சதுர அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை
- ஈழத்து ஆலயங்கள் (யாழ் மாவட்ட திருத்தலங்கள் - பாகம் - 01) நூலிலிருந்து ”வை.சோமசேகரன்” அவர்களது கட்டுரை.
- அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நூலிலிருந்து.
- யாழ் மாவட்ட திருத்தலங்கள் - பாகம் - 01 நூலிலிருந்து ”வை.சோமசேகரன்” அவர்களது கட்டுரை.