கோவாவில் சுற்றுலாத்துறை
கோவாவின் சுற்றுலா (ஆங்கிலம்: Tourism in Goa) பொதுவாக கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு உள்நாட்டு சுற்றுலா செயல்பாடுகள் குறைந்து காணப்படுகிறது. 2004 இல் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களில் 400,000 பேர் அயல்நாட்டினர். உருசியாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர் [1]. உருசியாவில் அடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். [2].2013ல், கோவாவுக்கு சுற்றுலா வந்த ரஷ்யர்களின் எண்ணிக்கை, 2.5 லட்சம்.
கோவா இரண்டு விதமான சுற்றுலா பயணிகளுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது. ஒன்று குளிர்காலம் மற்றது கோடைக்காலம். குளிர்காலத்தில் அயல்நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்(குறிப்பாக ஐரோப்பாவினர்) அதன் சிறப்பான தட்பவெப்ப சூழலை அனுபவித்து மகிழ வருகின்றனர். கோடைகாலத்தில் (அச்சமயம் கோவாவின் மழைக்காலம்) இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினர் தங்கள் விடுமுறையை கழிக்க வருகின்றனர்.
இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாகா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலமாக கோவா இருந்தாலும், உலகத்தார் இதனை இந்திய மண்ணில் உள்ள பண்டைய போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்குரிய பகுதியாகவே கருதுகின்றனர். போர்ச்சுகீசியரின் 450 ஆண்டுகால ஆதிக்கத்தின் விளைவாக கோவா இலத்தீன் கலாச்சாரத்தின் தாக்கத்தை பெற்று,தனது வேறுபட்ட வடிவங்களை காட்டி நாட்டின் பிற பாகங்களை விட அதிகமாக அயல்நாட்டினரை ஈர்க்கிறது. கோவா மாநிலம் அதன் சிறப்பு வாய்ந்த கடற்கரைகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களால் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இங்குள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த இடம் பாம் இயேசு தேவாலயம் ஆகும்.இங்குள்ள அகுடா கோட்டையும் முக்கிய சுற்றுலாத் தலம் ஆகும். சமீபத்தில் இந்திய வரலாறு,கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த மெழுகுச்சிலை காட்சியம் பழைய கோவாவில் திறக்கப்பட்டுள்ளது.