கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி (Calicut Medical College) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியானது 1957-ல் நிமாணிக்கப்பட்டது. இந்தப்பகுதியின் முக்கிய மருத்துவக் கல்லூரியாக இது விளங்குகிறது.இதுதான் கேரளாவில் தொடங்கப்பட்ட இரண்டாவது மருத்துவக் கல்லூரி ஆகும். இம்மருத்துவக் கல்லூரி வளாகத்தினுள் அரசு பல் மருத்துவமனை, அரசு செவிலியர் கல்லூரி, மருந்தகக் கல்லூரி, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் ஆகிய மருத்தவமனைகள் அமைந்துள்ளன. இம்மருத்துவக் கல்லூரி கோழிக்கோடு பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. கேரள மக்கட்தொகையில் 40 விழுக்காடு மக்களுக்கு இது சேவை செய்கிறது.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி | |
---|---|
![]() | |
நிறுவல்: | 1957 |
வகை: | அரசு |
கல்லூரி முதல்வர்: | மருத்துவர்.ரவீந்திரன் |
அமைவிடம்: | கோழிக்கோடு, கேரளா, இந்தியா |
வளாகம்: | 1.1 கிமீ2 |
இணையத்தளம்: | www.calicutmedicalcollege.ac.in |
அமைவிடம்
இக்கல்லூரி 270 ஏக்கர் (1.1சதுர கிலோமீட்டர்கள்) பரப்பளவில் கோழிக்கோடு நகரத்தின் கிழக்கே 10 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. கோழிக்கோடு தொடர்வண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 10 கிலோமீட்டர்கள் தொலைவிலும், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 கிலோமீட்டர்கள் தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை 212-லிருந்து (NH 212) 5 கிலோமீட்டர்கள் தொலைவிலும்அமைந்துள்ளது.
வரலாறு

1957 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தியதி கேரளா மாநில ஆளுனர் டாக்டர். ராமகிருஷ்ண ராவ் என்பவரால் இக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவர். கே. என். பிஷாரடி இக்கல்லூரியின் முதல் முதல்வராகப் பணியாற்றினார். இக்கல்லூரியின் அனைத்து பூர்வாங்கப் பணிகளும் 1959 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தியதி முடிவுற்றன.
மாணவர்கள்
1957-ல் வருடத்திற்கு 50 மாணவர்கள் வீதம் கல்விகற்கச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பின்னர் மாணவர்களின் எண்ணிக்கை 150 முதல் 200 வரை உயர்த்தப்பட்டது. முதற் குழு மாணவர்கள் 1956 ஆம் ஆண்டு சேர்ந்தனர். 2013 ஆண்டு சேர்ந்த மாணவர்கள் 57 வது குழுவாகும். மேலும் இக்கல்லூரி பல உயர்கல்வி வகுப்புகளையும் நடத்துகிறது.