கொஸ்கியஸ்கோ மலை

கொஸ்கியஸ்கோ மலை அல்லது கஸ்கியஸ்கோ மலை (Mount Kosciuszko அல்லது Mount Kosciusko) என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பனி மலைகளில் அமைந்துள்ள மலை ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 2,228 மீட்டர்கள் (7,310 அடி) உயரமுள்ளது. இதுவே ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள மலைகளில் மிக உயரமான மலையாகும். போலந்தின் தேசியவீரரான தாடஸ் கொஸ்கியஸ்கோ நினைவாக போலந்து நாடுகாண் பயணியும் மலையேறியுமான "போல் எட்மண்ட் ஸ்திரிசெலெஸ்கி" என்பவரால் 1840 ஆண்டு கொஸ்கியஸ்கோ மலை என இம்மலைக்குப் பெயரிடப்பட்டது[1].

கொஸ்கியஸ்கோ மலை
Mount Kosciuszko

கிழக்கில் இருந்து மலையின் தோற்றம்
உயரம் 2,228 மீட்டர்கள் (7,310 அடி)
அமைவு நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
மலைத்தொடர் பெரும் பிரிவுத் தொடர் / முக்கிய தொடர்
ஆள்கூறுகள் 36°27′00″S 148°16′00″E
பாறையின் வயது ??
முதல் ஏற்றம் 1840 (பவெல் எட்மண்ட் ஸ்திரிசெலெஸ்கி)
சுலபமாக ஏறும் வழி நடை
பட்டியல் Ultra prominent peak

இம்மலையின் உச்சியும் அதன் சூழவுள்ள பகுதிகளும் குளிர்காலங்களில் (பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் வரை) பனியால் மூடப்பட்டிருக்கும்.

படிமங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.