கோலோன் பல்கலைக்கழகம்

கோலோன் பல்கலைக்கழகம், (German: Universität zu Köln) ஐரோப்பாவின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றும் செருமனியின் மிகப்பெரிய பல்கலைக்கழமும் ஆகும். இப்பல்கலைக்கழகத்தில் 38,000 மாணவர்களும் 4,000 ஆசிரியர்களும் உள்ளனர். மேலும், ஐரோப்பிய மேலாண்மைக் கல்விக்கூடம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் குழுமத்தினை ஜெர்மனி சார்பாக இப்பல்கலைக்கழகம் நிறுவியது. ஜெர்மனியின் அனைத்து ஊடகங்களும் இதனைச் சிறந்த பல்கலைக்கழகம் என்று கூறியுள்ளன.

கோலோன் பல்கலைக்கழகம்
Universität zu Köln
1392 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் சின்னம்

இலத்தீன்: Universitatis Coloniensis
நிறுவல்:1388/1919
Closed 1798—1919
பீடங்கள்:482
மாணவர்கள்:45,606 (WS 2012/13)
முதுநிலை மாணவர்:3,718
அமைவிடம்:கோல்ன், செருமனி
இணையத்தளம்:www.uni-koeln.de

வரலாறு

இப்பல்கலைக்கழகம் 1388 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1798 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசினால் நிறுத்தப்பட்ட இப்பல்கலைக்கழகம் தற்போது மீண்டும் இயங்குகின்றது. 1919 ஆம் ஆண்டில் புருசிய அரசு மீண்டும் நிறுவ முடிவெடுத்தது. இப்பல்கலைக்கழகம் பொருளாதாரம், சட்டம், சமூகவியல் துறைகளில் உலகின் முன்னணி பல்கலைக்கழகமாக உள்ளது.

இந்தியவியல் தமிழியல் நிறுவனம்

மேற்கோள்கள்

    வெளியிணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.