கைட்டின்

கைட்டின் (Chitin) என்பது (C8H13O5N)n அசிட்டோகுளுக்கோசாமின் என்ற இரசாயனப்பொருளின் நீண்ட பல்லுறுப்பி ஆகும். இதனை இயற்கையில் பரவலாகக் காண முடியும். பூஞ்சையின் கலச்சுவர், மூட்டுக்காலிகளின் புறவன்கூடு, பறவைகளின் அலகுகள் ஆகியன இவ்வேதிப் பொருளாலேயே ஆக்கப்பட்டுள்ளன. இது பல்வேறு மருத்துவ மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

பூச்சியொன்று தனது வளர்ச்சித் தேவையின் பொருட்டு தனது கைட்டினால் ஆன புறவன்கூடை நீக்குகின்றது.
கைட்டின் மூலக்கூறொன்றின் கட்டமைப்பு வரைபடம்

பயன்பாடு

விவசாயம்

கைட்டின் தாவரங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதால் இது ஓர் பசளையாகப் பயன்படுகிறது. இது விளைச்சலை அதிகரிப்பதாக சூழல் பாதுகாப்பு நிறுவகம் கூறியுள்ளது.

கைத்தொழில்

தொழிற்சாலைப் பொருட்களை வலிமையானதாகவும் சிறந்த இணைப்பை உடையதாக மாற்ற கைட்டின் பயன்படுகின்றது. மை, துணி வகைகளின் இணைப்பிடைப் பொருளாக கைட்டின் காணப்படுகின்றது. இது சூரியக் கலங்களிலும் கைத்தொலைபேசித் திரைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

மருத்துவம்

கைட்டினானது அறுவைச் சிகிச்சை நூல்களை ஆக்க பயன்படுத்தப்படுகின்றது. காயம் ஆற்றப்படும்போது கைட்டினின் உயிரியாற் சிதைத்தல் செயற்பாடு காரணமாக இயல்பாகவே அழிந்துவிடும். இதனால் மீண்டும் அதனை அகற்றும் தேவை தடுக்கப்படுகின்றது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.