கைக்கிளை (திணை)

கைக்கிளை என்பது தொல்காப்பியர் காட்டும் ஏழு திணைகளில் ஒன்று.[1] தலைவன் தலைவிக்கு இடையே உள்ள ஒழுக்கம் 'கை' எனப்படும். இந்த ஒழுக்கம் இருவர் மனத்திலும் ஒத்திராமல் கிளைத்துப் பிளவுபட்டு இருக்குமானால் அது கைக்கிளை. (கையில் கிளை - என்று ஏழாம் வேற்றுமைத் தொகையாய் வருவதால் இரு சொற்களுக்கும் இடையே ஒற்று மிக்கது) கை என்னும் சொல் தமிழில் ஒழுக்கத்தைக் குறிக்கும். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான 'கைந்நிலை' என்னும் நூல் ஐந்தொழுக்கப் பண்பாட்டைப் பற்றிக் கூறுகிறது. ஒழுக்கத்தில் நிற்பது என்னும் பொருளைத் தரும் தொடர் இது

'கைகோள்' என்பது ஒழுக்கத்தைக் கைக்கொள்ளல் என்னும் பொருளைத் தருவதால் இலக்கண நெறியில் இது இரண்டாம் வேற்றுமைத் தொகை. இரண்டாம் வேற்றுமைத் தொடரில் அஃறிணைச் சொல் முன்னிற்குமானால் இடையில் ஒற்று மிகுவதில்லை. எனவே இது கைகோள் என நின்றது. கைகோளைக் களவு, கற்பு என இரு வகையாகப் பகுத்துப் பார்ப்பது தமிழ்நெறி.

தொல்காப்பியர் விளக்கம்

ஐந்திணை ஒழுக்கத்தைத் தொல்காப்பியர் "அப்பொடு புணர்ந்த ஐந்திணை" என்று குறிப்பிடுகிறார்.[2] எனவே கைக்கிளையும், பெருந்திணையும் அன்பொடு புணராதவை எனத் தெளிவாகிறது.

கைக்கிளைக் குறிப்பு [3]

அவள் காம உணர்வு நிரம்பாத இளையள். அவன் காம உணர்வைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் துன்புறுபவன். அவன் அவளிடம் தன்னையும் அவளையும் இணைத்துப் பேசுகிறான். நல்லதையும் பேசுகிறான். தீயதையும் பேசுகிறான். இது அவனது தருக்குப் பேச்சு. அவளிடமிருந்து மறுமொழி இல்லை. என்றாலும் நினைத்ததைச் சொல்லி இன்புறுகிறான். இதற்குக் கைக்கிளைக் குறிப்பு என்று பெயர்.

கைக்கிளை நிகழ்வு [4]

கைக்கிளை [4]பெருந்திணை [5]
மடலேறுவேன் என்று கூறுதல்மடலேறுதல்
இளமை போய்விடும் என்று கூறுதல்இளமை மாறிய பருவத்துக் காதல்
தேற்றமுடியாத காம உணர்வுகாம வெறி உரசல்கள்
காம வெறிக் குறும்புகள்காம வெறி உடலுறவு

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் பொருளதிகாரம் 1
  2. களவியல் 1
  3. நூற்பா 53
  4. நூற்பா 55
  5. நூற்பா 54
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.