கேதரின் ஜீடா-ஜோன்ஸ்

'கேதரின் ஜீடா ஜோன்ஸ் ([1] "ஜீட்டா" (என்றும் அழைக்கப்படுபவர்); 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர்), தற்போது கேதரின் ஜீடா -ஜோன்ஸ் என்று அனைவராலும் அறியப்படுகிறவர். இவர் ஒரு வெல்ஷ் நடிகை. தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்' . மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்ததன் மூலம் தனது கலையுலக வாழ்வில் காலடி எடுத்து வைத்தார். UK மற்றும் US நாட்டின் தொலைக்காட்சி படங்களிலும், அவ்வப்போது திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்த இவர், தி பாண்ட்டம் , தி மாஸ்க் ஆஃப் ஜாரோ , மேலும் 1990 களில் வெளிவந்த என்ட்ராப்மென்ட் போன்ற ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனது நடிப்புப் பயணத்தை ஆரம்பித்தார். இவர் அகாடமி விருது,பாஃப்டா விருது, ஸ்கீரின் ஆக்டர்ஸ் கில்டு விருது போன்ற விருதுகளுக்கு சொந்தக்காரர். இதன் ஒரு முத்தாய்ப்பாக, 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சிகாகோ என்ற திரைப்படத்தில் வெல்மா கெல்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த இவருக்கு திரைத்துறையில் கௌரவமிக்க விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் அவார்டுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

கேதரின் ஜீடா-ஜோன்ஸ்

Catherine Zeta-Jones in February 2005
இயற் பெயர் Catherine Zeta Jones
பிறப்பு 25 செப்டம்பர் 1969 (1969-09-25)
Swansea, Wales, UK
தொழில் Actress
நடிப்புக் காலம் 1984–present
துணைவர் Michael Douglas (தி. 2000தற்காலம்) «start: (2000)»"Marriage: Michael Douglas to கேதரின் ஜீடா-ஜோன்ஸ்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D)2 children

ஆரம்பகால வாழ்க்கை

சௌத் வேல்ஸில் உள்ள ஸ்வான்சியாவில், பட்ரிஷியா (கன்னிப்பெயர் ஃபேர்), (ஐரிஷ் உடைத்தயாரிப்பாளர்) என்பவருக்கும், டேவிட் "டாய்" ஜோன்ஸ் (பி. 1946), (வெல்ஷ் நாட்டு இனிப்புத் தொழிற்சாலை உரிமையாளர்) என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். இவரின் தாய்வழி பாட்டியின் பெயரான, கேதரின் ஃபேர் என்பதையும், தந்தைவழிப் பாட்டியான ஜீடா ஜோன்ஸ் (1917 – 14 ஆகஸ்ட் 2008)என்பதையும் சேர்த்துதான் இவரது பெயர் உருவானது என்பது சுவாரஸ்யமான விஷயம்.

ஜீடா ஜோன்ஸ் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்.[1][2] 1980 ஆம் ஆண்டில், அவரது பெற்றோர்கள் £100,000 பணத்தைப் பிங்கோ என்ற விளையாட்டில் சம்பாதித்தனர். அவர்களுக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்டம், நடுத்தர வர்க்கத்தினர் வாழும் இடமான ஸ்வான்சி பகுதியிலுள்ள புனித ஆண்ட்ரூஸ் டிரைவ் இன் பகுதியை ஒட்டிய மாயல்ஸ்க்கு இடம்பெயர வைத்தது. டம்பர்டன் ஹவுஸ் ஸ்கூலில் தனது இளமை கால கல்வியைப் படித்த ஜோன்ஸ்க்கு அதை தொடர முடியாமல் போனது. இதன் காரணம் நடிப்புத் துறையில் அவருக்கு இருந்த ஈடுபாடு. இவரால் படிப்பில் O தரநிலையை எட்டவே இல்லை. மேற்கு லண்டனின், சிஸ்விக் பகுதியிலுள்ள தி ஆர்ட்ஸ் எஜூகேஷனல் ஸ்கூல்ஸில் முழு நேர மியுசிக்கல் தியேட்டர் படிப்பை மூன்றாண்டு காலம் படித்து முடித்தார்.

தொழில் வாழ்க்கை

ஆரம்ப தொழில் வாழ்க்கை (1994-1995)

ஜீடா ஜோன்ஸின் திரையுலகப் பயணம் அவர் குழந்தையாக இருந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது. நண்பர்கள் மற்றும் குடும்ப விழாக்களில் பங்குகொண்டு தனது பங்கிற்கு அதில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது அவரது இயல்பு. இதுமட்டுமில்லாமல் இவர் சிறுவயதில் கத்தோலிக்க மதம் சார்ந்த நிகழ்வுகள் எதையும் விட்டுவைத்ததில்லை. இவரின் பங்களிப்பு இல்லாமல் அதுபோன்ற விழாக்கள் எதுவும் நடந்தது இல்லை எனுமளவிற்கு இவரது திறமை இருந்தது. இந்த நிகழ்வுகள் எல்லாம் நடக்கும்போது ஜோன்ஸுக்கு பத்து வயது கூட பூர்த்தியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஸ்வான்சியா கிராண்ட் தியேட்டர் தயாரிப்பில், ஆனி கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தொழில்ரீதியாக முதன்முதலாக நடித்தார். மேலும் 'பக்ஸி மெலோனில் தல்லுலாஹ்வாகவும் நடித்திருந்தார். இவருக்கு 14 வயதாக இருக்கும்போது, தி பைஜாமா கேம் என்ற நாடகத்தில் கேதரின் குரல்வளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிக்கி டோலன்ஸ் என்பவர் தனது கிராண்ட் தியேட்டரின் பெயரைச் சொல்லி அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினார். கேதரினின் திறமையைக் கண்டு வியந்த அவர், தனது அடுத்தடுத்த கலைப்பயணங்கள் அனைத்திலும் கேதரினின் பங்கு இருக்கும்படி பார்த்துக்கொண்டார். 1987 ஆம் ஆண்டு வெஸ்ட் எண்ட் தயாரிப்பின் கீழ் வந்த 42 ஸ்டீரீட் என்பதில் பெக்கி சாயர் கதாப்பாத்திரத்தில் வந்து அசத்தினார் கேதரின். நடிகை பெக்கி சாயரின் திடீர் இயலாமைக் காரணமாக அவரால் நடிப்பைத் தொடரமுடியாமல் போகவே, அப்படத்தில் கனமான கதாபாத்திரம் ஒன்றில் ஜோன்ஸ் நடித்தார். 1989 ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள கொலேசியம் தியேட்டரில் உள்ள இங்கிலிஷ் நேஷனல் ஒபரா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, குர்ட் வில் ஒபராவின் முயற்சியில் உருவான ஸ்டீரீட் சீன் நாடகத்தில் மே ஜோன்ஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும், ஃபிரெஞ்ச் இயக்குனர் பிலிப் டி ப்ரோகாவின் லெஸ் 1001 நைட்ஸ் [1001 நைட்ஸ்], (ஷெஹெராசடே என்றும் அழைக்கப்படும்) படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் ஃபிரான்ஸ் நாட்டிற்கு பயணமானார். இதுவே அவரது முதல் முழுநீளத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல் மற்றும் நடிப்புத் திறமை இவருக்கு பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தி தந்தது என்றாலும், பிரிட்டிஷ் டெலிவிஷனின், ஹெச். இ. பேட்ஸின் முயற்சியில் உருவான, தி டார்லிங் பட்ஸ் ஆஃப் மே என்ற படத்தில் மேரியாட் என்ற கதாப்பாத்திரத்தில் இவர் நடித்தப் பிறகு, இவரது முழுத்திறமையும் வெளிப்படுத்தப்பட்டது. இதன் விளைவு, பிரிட்டிஷ் மக்களின் கனவுகன்னி என்ற புகழை அடைந்தார். இவரைப் பற்றி செய்தி வராத நாளிதழ்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு இக்கதாபாத்திரத்தின் மூலம் ஜோன்ஸ் பிரபலமடைந்தார். ஜேஃப் வேன்ஸின் இசைப் பதிப்பாக வெளிவந்த ஸ்பார்டகஸ் என்ற படத்தில், ஒரு பகுதியான ஃபார் ஆல் டைம்" 1992 ஆம் ஆண்டு, வெளியானது. இதில் ஜீடா ஜோன்ஸின் இசை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. UK சந்தைகளில் #36 -ஐ அடைந்து சாதனைப் படைத்தது. "இன் தி ஆர்ம்ஸ் ஆஃப் லவ்", "ஐ கான்ட் ஹெல்ஃப் மைசெல்ஃப்" போன்றவற்றின் வெளியீட்டிற்கு சென்ற ஜோன்ஸ், அப்போது ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், "ட்ரூ லவ் வேஸ்" என்ற பாடலை டேவிட் எஸ்செக்ஸுடன் சேர்ந்து பாடினார். 1994 ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்ச்சி கிட்டத்தட்ட #38 என்ற நிலையை அடைந்து சாதனைப் படைத்தது என்று UK தனிப்பாடல்கள் புள்ளிவிவரம் கூறுகிறது. 'தி யங் இண்டியானா ஜோன்ஸ் க்ரோனிக்கல்ஸ் நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்திலும், [8] இலும் நடித்திருக்கிறார்.

நாவலின் பெயரை அடிப்படையாகக் கொண்டு, தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ் (1994), கேதரின் தி கிரேட் (1995) உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த இவர், தொடர்ந்து சாதனைப் பெண்மணியாக உலா வந்தார். ஸ்பிலிட்டிங் ஹேர்ஸ் (1993) என்ற நகைச்சுவைப் படத்தில், எரிக் ஐடில், ரிக் மொரானிஸ் மற்றும் ஜான் க்ளீஸ் ஆகியோருடன் இணைந்து ஜீடோ ஜோன்ஸ் நடித்தார்

திருப்புமுனை (1996–2001)

1999 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்ள வந்த ஜீடா ஜோன்ஸ்.

1996 ஆம் ஆண்டு, லீ ஃபாக் எழுதிய காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த தி பாண்ட்டம் படத்தில் இவில் ஏவியாட்ரிக்ஸாக, சாலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து CBS மினி-சீரீஸான டைட்டானிக் கில், டிம் கரி மற்றும் பீட்டர் கலக்கேர் உடன் நடித்தார். மினி-சீரிஸில் கேதரினின் பங்களிப்பைக் கண்ட ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தி மாஸ்க் ஆஃப் ஜாரோ படத்தில் இயக்குனரான, மார்ட்டின் கேம்பெல்லிடம் கேதரினைப் பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[3] தன்னுடைய நாட்டைச் சேர்ந்தவரான ஆன்டனி ஹாப்கின்ஸ் நடித்த அதே நேரத்தில் ஆன்டானியோ பன்டராஸுடனும் படங்களில் ஜோடி சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஜோன்ஸ். எலேனா என்ற கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்காக, இவர் நடனம், குதிரையேற்றம், வாள் சண்டை, பேச்சு வழக்கிற்கான வகுப்பு என்று அனைத்தையும் கற்றுத்தேர்ந்தார். இவரது நடிப்புத் திறமைக் குறித்து, வெரைட்டி என்ற பத்திரிகை, "ஜீடா ஜோன்ஸ் அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஒரு அருமையான நடிகை, கதாப்பாத்திரத்திற்காக தன்னை தியாகம் செய்துகொண்டு நடிப்பவர்" என்றெல்லாம் ஜோன்ஸின் திறமையை வர்ணித்திருந்தது. 1999 ஆம் ஆண்டு, என்ட்ராப்மென்ட் என்றப் படத்திற்காக சியன் கோனரியுடனும், 'தி ஹண்டிங் என்றப் படத்திற்காக லியம் நீசன் மற்றும் லில்லி டெய்லர் ஆகியோருடன் நடித்துள்ளார்.

தனது வருங்கால கணவர் மைக்கேல் டக்ளஸ் உடன் சேர்ந்து, 2000 ஆம் ஆண்டு டிராஃபிக் என்ற படத்தில் நடித்தார். டிராஃபிக் படத்தில் நடித்தவுடன் இவரைப் பாராட்டாத பத்திரிகைகளே இல்லை என்ற அளவிற்கு புகழ்பெற்றார். அதிலும் குறிப்பாக, டல்லாஸ் அப்சார்பர் என்ற பத்திரிகை இந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், "திரைப்பட உருவாக்கத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய படம் இது" என்று புகழ்ந்து தள்ளியது.[4] இவருடைய நடிப்புத் திறமைக்கு, மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது, அது கோல்டன் குளோப் விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதே. அதுவும், அசையும் படத்தில் சிறந்த துணை நடிகைக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு வெளிவந்த, அமெரிக்காஸ் ஸ்வீட்ஹார்ட்ஸ் என்றப் படத்தில், ஜூலியா ராபர்ட்ஸ், பில்லி கிறிஸ்டல் மற்றும் ஜான் குசாக் ஆகியோருடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜோன்ஸும் நடித்திருந்தார். ஆனால் மோசமான திரைக்கதை, இயக்கம் நடிப்பு என அனைத்திற்காகவும் அந்தப் படம் பலராலும் விமர்சிக்கப்பட்டது எனினும், உலகம் முழுவதிலும் சுமார் $138 மில்லியன் வருமானம் ஈட்டி, பாக்ஸ் ஆஃபிஸில் இடம்பிடித்தது.

சர்வதேச வெற்றி (2002 முதல் தற்போது வரை)

2002 ஆம் ஆண்டு, வெளிவந்த சிகாகோ என்றப் படத்தில், அருமையான வடேவில்லியன் வில்மா கெல்லி வேடம் இவருக்கு கிடைத்தது, அவரது திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவரது நடிப்புத் திறமையை அனைவரும் பாராட்டினர். குறிப்பாக சியாட்டில் போஸ்ட்- இன்டெலிஜென்சர் பத்திரிகை குறிப்பிடுகையில், "சலூன் கடைகளில் கூட கடவுளாக நினைத்து வழிபடுமளவிற்கு அற்புதமாக நடித்து மனதில் இடம்பிடித்த நடிகை ஜீடா ஜோன்ஸ்" என்று பாராட்டியது.[5] இவர், சிறந்த துணை நடிகைக்கான, அகாடமி விருதைப் பெற்றுள்ளார். சிகாகோ படத்தின் கதாப்பாத்திரத்திற்காக, 1920 ஆம் ஆண்டில் பிரபலமான (ஷார்ட் பாப்) எனப்படும் குட்டை முடி அலங்காரம் கொண்ட விக் அணிந்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். அப்படத்தில் நடனமும் ஆடியிருக்கிறார்.

2003 ஆம் ஆண்டு, அனிமேஷன் படமான சிந்துபாத்: லெஜண்ட் ஆஃப் தி செவன் சீஸ் என்ற படத்தில் நடிகர் பிராட் பிட்டுக்கு மரினா என்றப் பாடலை பாடியிருக்கிறார்.மேலும் இன்டாலரபிள் க்ருயல்டி என்ற பிளாக் காமெடிப் படத்தில், ஜார்ஜ் குளூனி உடன் சேர்ந்து, மரிலின் ரெக்ஸ்ராத் என்ற கதாப்பாத்திரத்தில், விவாகரத்து பெற்றுவரும் பெண்ணாக நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு, தி டெர்மினல் என்றப் படத்தில், அமலியா வாரன் என்ற கதாப்பாத்திரத்தில் விமானப் பணிப்பெண்ணாகவும், ஈரோப்போல் ஏஜெண்ட் இசபெல் லஹிரி நிறுவனத்தின் ஓஷியன்ஸ் டுவள் என்ற படத்திலும், ஓஷியன்ஸ் லெவன் என்ற படத்திலும் தொடர்ச்சியாக நடித்தப் பெருமை ஜோன்ஸுக்கு உண்டு. தி லெஜண்ட் ஆஃப் ஜாரோ படத்தின் தொடர்ச்சியான, தி மாஸ்க் ஆஃப் ஜாரோ படத்தில் எலேனா என்ற கதாப்பாத்திரத்தில் 2005 ஆம் ஆண்டு நடித்தார் ஜோன்ஸ். மோஸ்ட்லி மார்த்தா என்ற ஜெர்மன் படத் தழுவலான, நோ ரிசர்வேஷன் என்ற ரொமான்டிக் காமெடி படத்தில் 2007 ஆம் ஆண்டு நடித்தார் ஜோன்ஸ். அதனைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டும் கை பியர்ஸ் மற்றும் சாவோய்ர்ஸ் ரொனான் ஆகியோருடன் சேர்ந்து, டெத் ஆஃப் டிஃபையிங் ஆக்ட்ஸ் என்றப் படத்தில் நடித்தார். இந்தப் படம் சரித்திர நாயகன் ஹாரி ஹௌதினி என்பவரைப் பற்றியது. 2009 ஆம் ஆண்டு, ரொமான்டிக் காமெடிப் படமான, தி ரிபவுண்ட் என்ற படத்தில், ஜஸ்டின் பர்தா மேல் காதல் கொள்ளும் குழந்தைகளின் 40 வயதான தாயாக நடித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய, எ லிட்டில் நைட் மியூசிக் நிகழ்ச்சியில், ஏஞ்சலா லான்ஸ்பெர்ரி உடன் சேர்ந்து, ஜோன்ஸ் தன்னுடைய இசைப் பயணத்திற்கு மீண்டும் புத்துயிர ஏற்படப்போவதாக அறிவித்தார். லான்ஸ்பெர்ரி மகள் டிசைய்ர் கதாப்பாத்திரத்தில் அவர் நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.[6]

நடிப்புத் துறையைத் தவிர்த்து, ஜீடா ஜோன்ஸ் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார், காஸ்மெட்டிக் துறையில் பிரபலமான எலிசபெத் ஆர்டன் நிறுவனத்தின் உலகளாவிய விளம்பர தூதுவராக இருக்கிறார். டீ-மொபைல் என்ற தொலைபேசி நிறுவனம் மற்றும் ஆல்ஃபா ரோமியோ என்ற நிறுவனத்தின் தொலைக்காட்சி விளம்பரங்களில் இவர் நடித்துள்ளார் டி மோடோலோ என்ற நகைக்கடையின் விளம்பர தூதுவராகவும் ஜோன்ஸ் இருந்திருக்கிறார்

தனிப்பட்ட வாழ்க்கை

மைக்கேல் டக்ளஸ் என்ற நடிகரை, ஜோன்ஸ் மணந்துகொண்டார். இவர்கள் இருவரும் பிறந்த் தினம் ஒன்று என்பது சுவாரஸ்யமான விஷயம். ஜோன்ஸை விட அவர் 25 ஆண்டு வயதில் மூத்தவர். அவர்கள் இருவரும் சந்திக்கும் தருணத்தில் எல்லாம்ம் "உன் குழந்தைகளுக்கு நான் தந்தையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்" என்பதையே அவர் அடிக்கடி கூறுவார் என்று ஜோன்ஸ் தெரிவிக்கிறார்.[7] 2000 ஆவது ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி இவ்விருவரும் நியூ யார்க் நகரத்தில் உள்ள பிளாஸா ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். பாரம்பரியமிக்க வெல்ஷ் பாடகர் குழுவினர் (கோர் செம்ரேக் ரெஹோபோத் ), இவர்களது திருமணத்தில் பாடல்கள் பாடி அசத்தினர். வெல்ஷ் நகரின் அபெரிஸ்டிவித் என்ற இடத்தில்தான் கேதரினுக்கு அணிவிக்க இருந்த வெல்ஷின் செல்டிக் மோட்டிவுடனான தங்க திருமண மோதிரம் வாங்கப்பட்டதாக செய்திகள் உண்டு.[8] அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. அவர்களின் மகன், டைலன் மைக்கேல் டக்ளஸ் (பின்னர் டைலன் தாமஸ் எனப் பெயரிட்டனர்) ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி, 2000 ஆம் ஆண்டு பிறந்தான். டிராஃபிக் படத்தின் காட்சிகளில் கர்ப்பிணி கதாப்பாத்திரத்திற்கு, உண்மையிலேயே கர்ப்பிணியாக இருந்த ஜோன்ஸை நடிக்க வைத்தனர். இவரின் மகள் கேரிஸ் ஜீடா ஜோன்ஸ், 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி பிறந்தார். ஜீடா ஜோன்ஸ்க்கு, டேவிட் மற்றும் லிண்டன் என்ற இரண்டு சகோதரர்கள் உண்டு.[9] நீத், வேல்ஸ்க்கு அருகிலுள்ள இடத்தைச் சார்ந்த, போன்னி டைலர் என்ற பாடகியை, இவரது தந்தையின் உறவுக்காரர் மணந்துகொண்டார். இவரது இளைய தம்பி, லிண்டன் ஜோன்ஸ், மில்க்வுட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாகியாகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார் ஜீடா ஜோன்ஸின் பெற்றோர்கள், சமீபத்தில்தான் தங்களது பூர்வீக சொத்து உள்ள மாய்ல்ஸ்க்கு சென்றார்கள். இந்த இடம் ஸ்வான்சியா பகுதியில் இரண்டு மைல்கள் (சுமார் 3கிமீ) அப்பால் உள்ளது. இவர்கள் இருக்கும் வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட £2 மில்லியன் அதுவும் அவர்களின் மகள்தான் கொடுத்தார் என்ற துணுக்குத் தகவலும் உண்டு.

2004 ஆண்டு, கேதரினுக்கு சோகம் நிறைந்த ஆண்டாகவே இருந்தது. அதற்கு காரணம் டானட்டி நைட் என்ற பெண்மணி. இவர் கேதரின் வாழ்க்கையில் பிரச்சனையை உண்டாக்குவதற்காக, வன்முறை மிகுந்த கடிதங்க்ள் பலவற்றை கேதரினுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்து அவருக்கு பெரும் தொல்லைக் கொடுத்தார். பின்னர் ஜோன்ஸ் தனது கணவரின் உதவியுடன் அப்பெண்ணின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்தார். அப்பெண்ணின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களைக் கொடுத்து நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு தந்தார் ஜோன்ஸ்.[10] இதன்பின்னர்தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கேதரினின் கணவர் டக்ளஸ் மீது நைட் என்ற பெண்ணுக்கு ஒருதலைக் காதல் இருந்துவந்துள்ளது. தான் விரும்பியவர் கிடைக்காத காரணத்தினாலேயே இவர் இவ்வாறு நடந்துகொண்டது தெரியவந்தது. அக்டோபர் 2003 இல் இருந்து மே 2004 வரை இவர் இம்மாதிரியான காரியங்களில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். எனினும் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மீடியா

பேக் வித் எ வெஞ்சியன்ஸ் தொடரில், பிரெஞ்ச் & சாண்டர்ஸ் என்ற தங்களது நிகழ்ச்சியில், கேதரின் ஸ்பார்ட்டகஸ் ஜீடா ஜோன்ஸ் என்ற பெயரில் டான் பிரெஞ்ச் மற்றும் ஜெனிஃபர் சாண்டர்ஸ் என்பவர்கள் நாடகம் நிகழ்த்தி நையாண்டி செய்தனர். கேதரின் ஸ்பார்ட்டகஸ் ஜீடா டக்ளஸ் ஜோன்ஸின் தனிப்பெரும் சிறப்பு என்னவென்றால், வெல்ஷ் மொழியிலும், அமெரிக்கன் மொழியிலும் பேசுவதோடு மட்டுமில்லாமல், வெல்ஷ்-மொழியில் சொற்றொடர்களை உருவாக்குவதிலும் வல்லவர்.

டெப்ரா ஸ்டீபன்சன் உருவாக்கிய தி இம்ப்ரஷன்ஸ் ஷோ வித் கல்ஷா அண்ட் ஸ்டீபன்சன் என்ற காமெடி நிகழ்ச்சியில், பியுட்டி அண்ட் பீஸ்ட் என்ற கதையில் ஜீடா ஜோன்ஸை வைத்து நையாண்டி செய்திருக்கிறார்கள். இந்த கதாப்பாத்திரம், வெல்ஷ் மற்றும் அமெரிக்க மொழி வழக்குகளில் மாறி மாறி பேசும் திறமைக்கொண்டவராக அமைத்திருந்தார்கள். இந்நிகழ்ச்சி BBC இல் ஒளிபரப்பப்பட்டது.

திரைப்படப் பட்டியல்

ஆண்டு பெயர் கதாபாத்திரம் குறிப்புகள்
1990 லெஸ் 1001 நைட்ஸ் ஷெஹேரஜடே 1991-1993"தி டார்லிங் பட்ஸ் ஆஃப் மே"மேரியட்
1992 கிறிஸ்டோபர் கொலம்பஸ்: தி டிஸ்கவரி பீட்ரிஸ்
தி அட்வென்சர்ஸ் ஆஃப் யங் இண்டியானா ஜோன்ஸ்: டாரேடெவில்ஸ் ஆஃப் தி டெசர்ட் மாயா
1993 ஸ்பிலிட்டிங் ஹெர்ஸ் கிட்டி
1994 தி சிந்தர் பாத் விக்டோரியா சாப்மென்
தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ் எஸ்டாசியா வே
1995 கேதரின் தி கிரேட் கேதரின் II
ப்ளூ ஜூஸ் சோலி
1996 தி பான்ட்டம் சலா
1998 தி மாஸ்க் ஆப் ஜோரோ எலெனா (டி லா வேகா) மான்ட்டிரியோ பிடித்த பெண் புதுவரவிற்கான பிளாக் பஸ்டர் எண்டர்டெய்ன்மென்ட் விருது
சிறந்த நடிப்பிற்கான பெண் சாதனையாளருக்கான, MTV மூவி அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
சிறந்த சண்டைக்கான, MTV மூவி அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டார் பரிந்துரைப்பை ஆண்டானியோ பண்டராஸ் உடன் பகிர்ந்துகொண்டார்
பரிந்துரை - சிறந்த நடிகைக்கான சேடர்ன் விருது
1999 என்ட்ராப்மென்ட் விர்ஜினா பேக்கர் பிடித்த நடிகைக்கான (ஆக்ஷ‌னுக்காக) பிளாக் பஸ்டர் எண்டர்டெய்ன்மென்ட் அவார்டு
ஐரோப்பியன் ஃபிலிம் அவார்டு — ஜேம்ஸ்சன் பீப்பிள்ஸ் சாய்ஸ் அவார்டு - சிறந்த ஐரோப்பிய நடிகை
தி ஹண்டிங் தியோ பிடித்த நடிகைக்கான (திகில் கதாப்பாத்திரத்திற்கு) பிளாக் பஸ்டர் எண்டர்டெய்ன்மென்ட் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
2000 ஹை ஃபெடிலிட்டி சார்லி நிக்கோல்சன்
டிராஃபிக் ஹெலனா அயலா நகரும் படத்தில் மிகச் சிறந்த நடிப்பிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது
பிடித்த துணை நடிகைக்கான (டிராமாவிற்கு) பிளாக் பஸ்டர் எண்டர்டெய்ன்மென்ட் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
பரிந்துரைக்கப்பட்டது – சிறந்த துணை நடிகைக்கான சிகாகோ பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் விருது
சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்
திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
2001 அமெரிக்காஸ் ஸ்வீட் ஹார்ட்ஸ் ஜுவன் ஹாரிசன்
2002 சிகாகோ வெல்மா கெல்லி சிறந்த துணை நடிகைக்கான அகாடமி விருது
துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருது
சிறந்த நடிகர்களுக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் விருது
சிறந்த துணை நடிகைக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருது
சிறந்த நடிகைக்கான ஈவ்னிங் ஸ்டாண்டர்டு பிரிட்டிஷ் ஃபிலிம் அவார்டு
சிறந்த துணை நடிகைக்கான ஃபொனிக்ஸ் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி அவார்டு
நகரும் படத்தில் மிகச் சிறந்த நடிப்பிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது
நடிகைகளில் துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
நியமனம்செய்யப்பட்டவை -- சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது - திரைப்பட இசை அல்லது நகைச்சுவை
சிறந்த துணை நடிகைக்கான ஆன்லைன் ஃபிலி கிரிட்டிக்ஸ் சொசைட்டி அவார்டு
பரிந்துரைக்கப்பட்டது — சிறந்த கதாப்பாத்திரத்திற்காக ஃபொனிக்ஸ் ஃபிலிம் கிரிடிக்ஸ் சொஸைட்டி விருது
2003) 2003) சிண்பாத்: லெஜண்ட் ஆஃப் தி செவன் சீஸ் மரினா குரல் பாத்திரம்
இன்டோலரபிள் குருயல்டி மெர்லின் ரெக்ஸ்ரோத்
2004 தி டெர்மினல் அமெலியா வாரன்
ஓசென்'ஸ் ட்வல் இசபெல் லஹிரி பரிந்துரைக்கப்பட்டது — சிறந்த கதாப்பாத்திரத்திற்காக பிராட்கேஸ்ட் ஃபிலிம் கிரிடிக்ஸ் அசோசியேஷன் விருது
2005 தி லெஜண்ட் ஆஃப் ஜாரோ எலேனா டி லா வேகா முரிட்டா பிடித்த பெண் ஆக்ஷன் ஸ்டாருக்கான பீப்பிள்ஸ் சாய்ஸ் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்
2007 நோ ரிசர்வேஷன் கேத் ஆம்ஸ்ட்ராங்
2008 டெத் டிஃவையிங் ஆக்ட்ஸ் மேரி மெக்கார்வீ
2009 தி ரோபவுண்ட் சாண்டி
2011 க்ளியோ க்ளியோபாட்ரா ப்ரீ-புரோடக்ஷனில்

தொலைக்காட்சி

align="center" ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1991 அவுட் ஆஃப் தி ப்ளூ கிறிஸ்டி BBC டெலிவிஷன் ப்ளே

1991–1993

தி டார்லிங் பட்ஸ் ஆஃப் மே மாரியட் 18 பாகங்கள்; கேதரின் ஜீடோ ஜோன்ஸ் என வழங்கப்பட்டது
1992 கப் தி ஃபவுடரே [11] தெரியாதது பாகம் "ரீசர்ஜன்ஸ்"
1993 தி யங் இண்டியானா ஜோன்ஸ் க்ரோனிக்கல்ஸ்

மாயா

பாகம் "பாலஸ்தீனம், அக்டோபர் 1917"
1996 டைட்டானிக் இசபெல்லா பாரடைன் TV மினி-சீரிஸ்

இசை சரிதம்

align="center" ஆண்டு சவுண்ட் ட்ராக்
2002 சிகாகோ

குறிப்புதவிகள்

  1. "Larry King Interview with Catherine Zeta-Jones". CNN.
  2. கேதரின் ஜீடா ஜோன்ஸ் . The Biography Channel.co.uk.
  3. "Catherine Zeta-Jones biography". Tiscali. பார்த்த நாள் 14 August 2006.
  4. "Dallas — Movies — American High". Dallasobserver.com (2001-01-04). பார்த்த நாள் 2009-10-17.
  5. "Chichi 'Chicago': The musical makes a movie comeback". Seattlepi.nwsource.com (2002-12-27). பார்த்த நாள் 2009-10-17.
  6. "From Angela To Zeta". Nypost.com (2009-09-02). மூல முகவரியிலிருந்து 2012-09-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-10-17.
  7. கேத்தரீன் ஜீட்டா-ஜோன்ஸ் உடன் ஒரு கலகலப்பான சந்திப்பு . தி சிட்னி மார்னிங் ஹெரால்ட். 12 ஜூலை 2007.
  8. "Biography for Catherine Zeta-Jones". IMDB.com (2008-10-01). பார்த்த நாள் 2008-10-01.
  9. "Catherine Zeta-Jones biography". Tiscali.co.uk. பார்த்த நாள் 2009-10-17.
  10. ஜீட்டாவுக்கு தொல்லை கொடுத்தவருக்கு மூன்றாண்டுகால தண்டனை பிபிசி நியூஸ் வேல்ஸ்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.