முதலியார் (இலங்கை)

முதலி (Mudali) அல்லது முதலியார் (Mudaliyar) என்பது குடியேற்றக் காலத்தில் இலங்கையில் இருந்த ஒரு பதவிப் பெயர் ஆகும். கிபி 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் முதலியார் வகுப்பை உருவாக்கினார்கள். இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பல்வேறு சாதிகள் மத்தியில் இருந்து போர்த்துக்கேய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர்கள் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். போர்த்துக்கேசரின் பின்னர் ஆட்சி செய்த ஒல்லாந்தர் இப்பதவியை முதலி என்ற பட்டப் பெயருடன் தொடர்ந்தனர். பின்னர் ஆட்சிக்கு வந்த பிரித்தானியர் முதலியார் பதவியை 1798 ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தினர்.[1] இலங்கை ஆளுனரினால் முதலியார்கள் நியமிக்கப்பட்டனர். 1930களில் பிரித்தானிய இலங்கை அரசின் கீழிருந்த சுதேச திணைக்களம் மூடப்பட்டதை அடுத்து முதலியார் பதவியும் ஒழிக்கப்பட்டது.

வரலாறு

முதலியார் என்றால் ‘முதலாமவர்’/முதன்மையானவர் என்று பொருள். இது செல்வச் செழிப்புடன் வாழும் நபரைக் குறிக்கும். போர்த்துக்கீசிய ஆட்சியாளர் உள்ளூர் நிர்வாக சட்ட மாதிரிகளையும், வரி அறவிடும் முறைகளையும் பராமரித்தனர். ஆனாலும், சில புதிய பதவிகளை அவர்கள் உருவாக்கினர். அதிகார் எனப்படுபவர் நில வாடகை, வரிகள் என்பவற்றை ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள கிராமங்களிலும் அறிவிடுபவராவார். இவர்களை முதலியார்மார் மேற்பார்வை செய்தனர். தமிழ் முதலியார்மார் குடாநாட்டு மக்கள் மீது கணிசமான செல்வாக்குச் செலுத்தி வந்தனர். போர்த்துக்கேய உத்தியோகத்தர்கள் முதலியார்மார்களுக்கிடையிலான பிரதான தொடர்பாகவும் கிராம உத்தியோகத்தவர்களை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தையும் கொண்டிருந்தனர்.[2]

இலங்கையின் புகழ்பெற்ற சில முதலியார்கள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.