கே-2 கொடுமுடி

உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது இக் கே-2 என்னும் கொடுமுடிதான். இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோரம் மலைகளில் 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதியான, பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த ஜில்ஜிட்-பல்திஸ்தானில் உள்ளது.

கே-2 கொடுமுடி

சீனர்கள் இதனை கோகிர் (Qogir) என்று அழைக்கிறார்கள். இதன் மற்ற பெயர்களாவன, 'கோ'ட்வின் - ஆஸ்டின் மலை (Mount Godwin-Austen), லம்பா பஃஅர் (Lambha Pahar), சோகோரி, கெச்சு, தப்ஸங்கு.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.