கே. பி. அன்பழகன்
கே. பி. அன்பழகன் (K. P. Anbazagan, பிறப்பு: 30 ஏப்ரல் 1958)[1]) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1996 இல் ஊராட்சிக் குழு உறுப்பினராக அ.தி.மு.க.வில் தன் அரசியல் வாழ்வைத் துவக்கியவர். பாலக்கோடு சட்டமன்ற தொகுதியிலிருந்து 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அ.தி.மு,க. அரசில் செய்தி விளப்பரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். தரும்புரி மாவட்ட செயலாளராக கட்சியில் பதவி வகிக்கிறார்.[3] 2016 ஆண்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கே. பி. அன்பழகன்
இவா் தற்போது தமிழக அரசின் உயா்கல்வித்துறை அமைச்சராக உள்ளாா். இதற்கு முன்னா் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தாா்.
மேற்கோள்கள்
- "Legislative Assembly Tamil Nadu". TN.Gov. 11 January 2006. Archived from the original on 3-04-2011. https://web.archive.org/web/20110403054531/http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=142.
- "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
- "தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராக கே.பி. அன்பழகன் நியமனம்". தினமணி (20, மார்ச், 2016). பார்த்த நாள் 7 ஏப்ரல் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.