கே. எஸ். அழகிரி
கே. எஸ். அழகிரி இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் ஆவார்.[1] இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பாராளுமன்றத்திற்கு கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1991-ஆம் ஆண்டு தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்
- "தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம்". தினத்தந்தி (2 பெப்ரவரி 2019). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2019.
- 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
- 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.